பக்கம் எண் :

முதற் காண்டம்299

"கார்த் திரள் மறையா, கடலின் உள் மூழ்கா, கடை இலாது
                      ஒளிர் பரஞ் சுடரே!
நீர்த் திரள் சுருட்டி மாறு அலை இன்றி நிலைபெறும் செல்வ
                      நல் கடலே!
போர்த் திரள் பொருதக் கதுவிடா அரணே! பூவனம்
                      தாங்கிய பொறையே!
சூர்த் திரள் பயக்கும் நோய்த் திரள் துடைத்து, துகள்
                      துடைத்து, உயிர் தரும் மருந்தே!

     "மேகத் திரளால் மறைக்கப்படாமலும், கடலினுள் மூழ்கி மறையாமலும்,
முடிவு இல்லாது ஒளிரும் பரம ஞாயிறே! நீர்த் திரளைச் சுருட்டி அடித்து
நிலை மாறச் செய்யும் அலையே இல்லாமல் நிலைபெறும் நல்ல செல்வக்
கடலே! போருக்குரிய படைத் திரள் மோதவும் வெடித்து வழி விடுதல்
இல்லாத மதில் போன்றவனே! பூவுலகத்தைத் தாங்கி நின்ற மலை
போன்றவனே! துன்பத்தைத் திரளாகத் தரும் திரளான நோய்களையும்
துடைத்து, குற்றங்களையும் துடைத்து, மக்களுக்கு உயிர் தரும் அமுதம்
போன்றவனே!"
 
                     36
விண்கிழித் தோங்கி மின்பயில் கொடிஞ்சி வேய்ந்துயர்
                              தேர்த்திரள் காப்போ
மண்கிழித் தொளிபாய் வாட்டிரள் காப்போ கால்தவிர்
                              பரித்திரள் காப்போ
கண்கிழித் தொழுகும் புனலெனச் சீறி மதம்பொழி
                              கரித்திரள் காப்போ
புண்கிழித் தடலார் காப்பதோ நீயே புரந்துசெய் காப்பது
                              காப்பே.
 
விண் கிழித்து ஓங்கி, மின் பயில் கொடிஞ்சி வேய்ந்து உயர்
                            தேர்த் திரள் காப்போ?
கண் கிழித்து ஒளி பாய் வாள் திரள் காப்போ? கால் தவிர்
                            பரித்திரள் காப்போ?
மண் கிழித்து ஒழுகும் புனல் எனச் சீறி மதம் பொழி கரித்
                            திரள் காப்போ?
புண் கிழித்த அடலார் காப்பு அதோ? நீயே புரந்து செய் காப்பு
                            அது காப்பே,"