|
"வானத்தைக்
கிழித்த தன்மையாய் நிமிர்ந்து, ஒளி நிறைந்த
கொடிஞ்சியால் அழகு செய்யப் பெற்று உயர்ந்து நிற்கும் தேர்களின்
திரளும் பாதுகாப்பு ஆகுமோ? கண்களைப் பறித்து ஒளி பாயும் வாளின்
திரளும் பாதுகாப்பாகுமோ? காற்றையும் வேகத்தால் மிஞ்சிய குதிரையின்
திரளும் பாதுகாப்பாகுமோ? நிலத்தைக் கிழித்துக்கொண்டு ஓடும்
வெள்ளம்போல் சீறி மத நீரைப் பொழியும் யானையின் திரளும்
பாதுகாப்பாகுமோ? பகைவர் உடலைப் புண்படக் கிழித்த வலிமை வாய்ந்த
வீரரின் காவலும் பாதுகாப்பாகுமோ? இவையெல்லாம் பாதுகாப்பு ஆகா.
நீயே காப்பாற்றிச் செய்கின்ற காவலே உண்மையான பாதுகாப்பாகும்."
கிழித்திடலார்
- கிழித்த + அடலார் - 'கிழித்தவடலார்' என
வரவேண்டியதன் தொகுத்தல் விகாரம். கொடிஞ்சி - தேரின் உச்சி..
|
37
|
வஞ்சின ருளம்போ
லளக்கரி தாழ்ந்த வாருணத் திடைவழி
கீண்டி
யஞ்சினர் நனையா கடக்கலே தந்தா யாறுநின் றதர்விடத்
தந்தாய்
துஞ்சினர் சுகத்தி லினிதுமூ விளையோர் சிகிக்கிடை
குளிர்ந்துறத் தந்தா
யெஞ்சின ருன்னை நம்பிய தன்மைத் தியற்றவொன்
றுனக்கரி துண்டோ. |
| |
"வஞ்சினர் உளம்
போல் அளக்க அரிது ஆழ்ந்த வாருணத்து
இடை வழி கீண்டி,
அஞ்சினர் நனையா கடக்கலே தந்தாய்; ஆறு நின்று அதர்
விடத் தந்தாய்;
துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு இடை
குளிர்ந்து உறத் தந்தாய்;
எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு
அரிது உண்டோ?" |
"வஞ்சகர் உள்ளம்
போல் அளப்பதற்கு அரிய ஆழமுள்ள கடலின்
நடுவே வழியை உண்டாக்கி, அஞ்சி நின்ற இசுரவேலர். கால் நனையாமல்
கடந்து செல்ல அருளினாய்; யோர்தான் ஆறு ஓடாமல் பிரிந்து நின்று
அவர்களுக்கு வழி விட அருளினாய்; துயில் கொள்பவர் போன்ற சுகத்தோடு
இன்பமாக மூன்று வாலிபர் நெருப்பினிடையே குளிர்ச்சியோடு தங்கியிருக்க
அருளினாய்; குறை உடையோர் உன்னை நம்பியபடி அவர்கள்
வேண்டுவதைச் செய்ய உனக்கு அரியதென்று ஏதேனும் உண்டோ?"
|