|
கடல் - செங்கடல்.
கடல் வழி கால் நனையாமல் நடந்தது - ப. ஏ.,
யாத்திராகமம், 14:5 - 29 காண்க. ஆறு நின்று வழி விட்டது - யோசுவா,
3:14 - 17 காண்க. நெருப்பு குளிர்ந்தது - தானியேல், 3:13 - 30 காண்க.
|
38
|
தலையெழும்
வரையோ டுயர்ந்தமற் றெவையுந் தகர்ப்பவா
னேறுமிழ் முகிலே
முலையெழும் பயனே ருமிழ்ந்தநீர் குழிவின் முடுகிவந்
தினிதுறை வதுபோ
வலையெழுங் கடல்சூழ் புடவியிற் செருக்குற் றசடரைத்
தாழ்த்திய கையாற்
கலையெழும் பயனாற் றாழ்குவ ரெடுத்துக் களிபடக்
கருணையே செய்வாய். |
| |
"தலை எழும் வரையோடு
உயர்ந்த மற்று எவையும் தகர்ப்ப
வான் ஏறு உமிழ் முகிலே,
முலை எழும் பயன் நேர் உமிழ்ந்த நீர் குழிவின் முடுகி வந்து
இனிது உறைவது போல்,
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரைத்
தாழ்த்திய கையால்,
கலை எழும் பயனால் தாழ்குவர் எடுத்து, களிபடக் கருணையே
செய்வாய்." |
"சிகரங்கள்
நிமிர்ந்து நிற்கும் மலையோடு மற்றும் உயர்ந்து நிற்கும்
எவற்றையும் உடைக்குமாறு வானத்திலிருந்து இடியைக் கக்கும் அதே மேகம்,
முலையினின்று தோன்றும் பாலுக்கு நிகராகப் பொழிந்த நீர் குழிவான இடம்
நோக்கிப் பாய்ந்து வந்து இனிமையாகத் தங்குவது போல, நீயும் அலைகள்
எழும்பும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அகந்தை கொண்ட கீழ்மக்களைத்
தாழ்த்திய அதே கையால், கல்வியால் அடையும் அறிவுப் பயனால் தாழ்மை
கொண்டுள்ளவரைத் தூக்கி நிறுத்தி, மகிழ்ச்சி கொள்ளுமாறு அவர்களுக்குக்
கருணையே செய்வாய்." |