|
பின் 26-வது,
கருணையன் மாட்சிப் படலம், 42-ஆம் பாடலில்
மரியாளின் மகிமைக் கீதமாக வரும் பகுதியை ஒப்பு நோக்குக. உற்ற +
அசடர்--'உற்றவசடர்' என வரவேண்டியது, 'உற்றசடர்' எனத் தொகுத்தல்
விகாரம் கொண்டது.
| 39 |
வான்முகத்
தெழுந்தீங் குலகையே நோக்கி மாலிதன்
செழுங்கதிர்க் கோலாற்
கான்முகத் தரிதோ ரோவிய மென்னக் கடிமல ரெழுதிய
வண்ண
நூன்முகத் தடங்கா தன்பிலென் றணிமை நோக்கிமுட்
கான்பொரு வென்னுள்
தேன்முகத் தவிழ்ந்த பூம்பொழி லொப்பத் திருத்திய
நினதருட் களவோ. |
| |
"வான் முகத்து
எழுந்து, ஈங்கு உலகையே நோக்கி, மாலி,
தன் செழுங் கதிர்க் கோலால்
கான் முகத்து அரிது ஓர் ஓவியம் என்னக் கடி மலர் எழுதிய
வண்ணம்,
நூல் முகத்து அடங்காத அன்பில், என் தணிமை நோக்கி,
முள் கான் பொருவு என் உள்
தேன் முகத்து அவிழ்ந்த பூம் பொழில் ஒப்பத் திருத்திய
நினது அருட்கு அளவோ?" |
"ஞாயிறு வானுலகில்
உயர்ந்து நின்றும், இங்கு இவ்வுலகையே நோக்கி,
தன் செழுமையான கதிராகிய எழுது கோலால் காட்டில் அரியதொரு
சித்திரம் போல மணமுள்ள மலர்களை எழுதிக் காட்டும். அது போலவே,
நூல்களில் எழுதி அடங்காத அன்பு கொண்டு, என் தாழ்மையை நோக்கி,
முள் நிறைந்த காட்டுக்கு ஒப்பான என் உள்ளத்தைத் தேன் கொண்டு
மலர்ந்த பூஞ்சோலைக்கு ஒப்பாகத் திருத்தி அமைத்த உனது கருணைக்கு
அளவும் உண்டோ?" மலர்களை எழுதிக் காட்டுதலாவது,
மலர்களைத்
தன் ஒளியால் புலப்படச் செய்தலாம், 'அடங்காதவன்பு'
என வர வேண்டியது, 'அடங்காதன்பு' என வந்தது தொகுத்தல் விகாரம். |