பக்கம் எண் :

முதற் காண்டம்303

                    40
காய்ந்தபோ தழன்முன் வையென வுன்முன் காய்ந்தெரி
                            யாதுண்டோ கருணை
யீய்ந்தபோ தருத்தி பின்னுற வளிப்பா யிருடவிர்
                            காட்சியா லனைத்து
மாய்ந்தபோ திருளு முள்ளமுங் கடந்தே யறிகிலா
                            தேதுண்டோ மனுவாய்
வேய்ந்தபோ தன்றே யென்னுயி ரின்ப வேலையின்
                            மூழ்குப செய்வாய்.
 
"காய்ந்த போது, அழல் முன் வை என, உன் முன் காய்ந்து
                        எரியாதது உண்டோ? கருணை
ஈய்ந்த போது, அருத்தி பின் உற அளிப்பாய். இருள் தவிர்
                        காட்சியால் அனைத்தும்
ஆய்ந்த போது, இருளும் உள்ளமும் கடந்தே, அறிகு இலாதது
                        ஏது உண்டோ? மனு
ஆய் வேய்ந்த போது அன்றே, என் உயிர் இன்ப வேலையில்
                        மூழ்குப செய்வாய்?"

     "நீ சினம் கொண்ட போது, நெருப்பின் முன் வைக்கோல் போல்,
உன் முன் காய்ந்து எரியாத ஒரு பொருளும் உண்டோ? கருணையோடு
நீ ஈய முற்பட்ட போது, கேட்டவரின் ஆசையும் தோற்கும் அளவிற்குக்
கொடுப்பாய். இருளுக்கு இடமில்லாத அறிவினால் அனைத்தையும்
ஆராய்ந்தபோது, எவ்வகையான இருளையும் எவ்வெவர் மனத்தையும்
கடந்து நின்று, அறியப்படாத பொருள் ஏதேனும் உண்டோ? நீ மனிதனாய்
வந்து தோன்றிய போதல்லவா என் உயிரை இன்பக் கடலில் மூழ்கச்
செய்வாய்?"

     'எரியாத துண்டோ', 'இலாத தேது' என்பன, 'எரியா துண்டோ,'
'இலா தேது' எனத் தொகுத்தல் விகாரம் கொண்டன.
 
                      41
வளிச்சிறை யாகப் பொங்கலை கீண்டி மரக்கலம் போயின
                                          வழியு
மொளிச்சிறை யாக விண்டிசை கீண்டி யோதிமம் பறந்தன
                                          வழியு
மளிச்சிறை யாக நினைவுசெல் வழியு மாய்ந்தவை யடைகினு
                                          மார்வக்
களிச்சிறை யாக நீ வரும் வழியே கண்டதை யடைவது
                                          பாலோ.