பக்கம் எண் :

முதற் காண்டம்309

"நிலை கொண்டேனும், அந் நிலையால் நிலைக்கும் பயன்
                  
     ஒன்று உயிர்க்கு உண்டோ?
அலை கொண்டு அவியா மொய்க்கடல் போன்று அயர்ந்து
                       மயங்கும் மனம்
நிலை கொண்டு, உலை கொண்டு எரிந்தாற் போல நசை
                       உய்க்கும் துயர் அற்று உள் குளிர,
கலை கொண்டவரும் இங்கு ஏதோ கண்டார்?" என்றான்
                       பொறி செறித்தான்.

     ஐம்பொறிகளையும் அடக்கியவனான சூசை, "அவையெல்லாம் நிலை
கொண்டாலும், அந்நிலைப் பாட்டினால் மனித உயிர்கட்கு நிலையான பயன்
ஏதேனும் உண்டோ? அலைகளைக் கொண்டு என்றும் அடங்காத வலிமை
உள்ள கடல் போல் அயர்ந்து மயங்கும் மனித மனம், நிலை கொண்டும்
அடுப்பில் அகப்பட்டுக் கொண்டு எரிந்தாற் போல ஆசை அலைக்கும்
துயரம் அற்றும், உள்ளம் குளிர்வதற்கு கலைகளையெல்லாம் கற்றுக்
கொண்டவரும் இவ்வுலகில் ஏதேனும் வழி கண்டுள்ளனரோ," என்றான்.

     'ஏது கண்டாரோ?' என மாற்றிக் கூட்டுக.
 
                  48
கனவிற் பிடித்த தனமென்றோ கனநின் றொல்கிப்
                          பாய்ந்தமின்னோ
சினவித் திளைதீ முன்வையோ திளைப்ப வுவரிற்
                          பெய்யுறையோ
நினவிற் கூம னுணர்தூதோ நிசிநா டகர்கொள்
                          கோலமதோ
வெனவித் திசைகொள் வாழ்வனைத்து மென்றாள்
                     பிறைதேய்த் தொளிர்பதத்தாள்.
 
"கனவில் பிடித்த தனம் என்றோ? கனம் நின்று ஒல்கிப் பாய்ந்த
                                   மின்னோ?
சினவித் திளை தீ முன் வையோ? திளைப்ப உவரில் பெய்
                                   உறையோ?
நினவிற்கு ஊமன் உணர் தூதோ? நிசி நாடகர் கொள் கோலம்
                                   அதோ என     
இத் திசை கொள் வாழ்வு அனைத்தும்" என்றாள் பிறை தேய்த்து
                                   ஒளிர் பதத்தாள்.