பக்கம் எண் :

முதற் காண்டம்308

                      46
தேர்மேற் றியங்கும் பதாகையதோ சிகரி சிந்துஞ் சிந்தலையோ
நீர்மேற் படருஞ் சைவலமோ நீர்மே லாடு குமிழிகளோ
தார்மேற் பனியோ நுண்மணன்மேற் றடத்தில் வரைந்த
                                    வுணர்வென்றோ
பார்மேற் கடவு ணிலையில்லார் பான்மை யென்றாள்
                                    மீன்முடியாள்.
 
"தேர் மேல் தியங்கும் பதாகை அதோ? சிகரி சிந்தும் சிந்து
                                    அலையோ?
நீர் மேல் படரும் சைவலமோ? நீர் மேல் ஆடு குமிழிகளோ?
தார் மேல் பனியோ? நுண் மணல் மேல் தடத்தில் வரைந்த உணர்வு
                                    என்றோ,
பார் மேல் கடவுள் நிலை இல்லார் பான்மை?" என்றாள் மீன்
                                    முடியாள்.

     விண்மீன்களை முடியாக அணிந்த மரியாள், அவனை நோக்கி,
"இவ்வுலகில் ஆண்டவனை உறுதிநிலையாகக் கொள்ளாதவர் தன்மை தேரின்
மேல் அசைந்தாடும் கொடி தானோ? மலையுச்சியினின்று சிந்தி விழும்
அருவியின் அலையோ? நீரின் மேல் படரும் பாசியோ? நீரின் மேல்
தோன்றும் குமிழிகளோ? பூவின் மேல் விழுந்த பனியோ? வழித் தடத்தில்
நுண்ணிய மணல் மேல் வரைந்து காட்டிய உணர்வு என்போமோ?" என்றாள்.

 
                      47
நிலைகொண் டேனு மந்நிலையால் நிலைக்கும் பயனொன்
                                  றுயிர்க்குண்டோ
வலைகொண் டவியா மொய்க்கடல்போன் றயர்ந்து மயங்கு
                                  மன
நிலைகொண் டுலைகொண் டெரிந்தாற் போலநசை யுய்க்குந்
                                  துயரற் றுள்குளிரக்
கலைகொண் டவரு மிங்கேதோ கண்டா ரென்றான்
                                  பொறிசெறித்தான்.