பக்கம் எண் :

முதற் காண்டம்307

                     பேரின்பப் பேச்சு

     - மா, மா, - - காய், - மா, - மா, - - காய்
 
                    45
பொருள்கொண் டெவையு மாக்கினனப் பொருளிற் குன்றா
                               புகுந்துளனாய்
மருள்கொண் டவைகொள் மாறுமிலா வயிரக் குன்றி
                               னிலைகொண்டோ
னருள்கொண் டவர்க்கல் லாலுண்டோ வாவல் கொண்ட
                               வுயிர்க்கு நிலை
சுருள்கொண் டலைநீர் சூழ்ந்தபுவி சூழ்ந்தா லென்றான்
                               பூந்துசத்தான்.
 
"பொருள் கொண்டு எவையும் ஆக்கினன், அப் பொருளில்
                           குன்றா புகுந்துளன் ஆய்,
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா, வயிரக் குன்றின்
                           நிலை கொண்டோன்
அருள் கொண்டவர்க்கு அல்லால், உண்டோ ஆவல் கொண்ட
                           உயிர்க்கு நிலை,
சுருள் கொண்டு அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால்?" என்றான்
                           பூந் துசத்தான்.

     மலர்க் கொடியை உடைய சூசை, மரியாளை நோக்கி, "ஒரு குறிக்கோள்
கொண்டு பொருள்கள் எல்லாவற்றையும் படைத்தவனாய், அப் பொருள்களில்
குறையாது புகுந்து நிறைந்தவனுமாகி, அப்பொருள்கள், மயக்கம் கொண்டு
அடையும் மாறுதல் தனக்கு இல்லாதவனுமாய், வைர மலை போல் என்றும்
உறுதியாய் நிலை கொண்ட ஆண்டவனின் அருள் கொண்டவர்க்கே
உறுதிநிலை உண்டு, அல்லாமல், சுழன்று கொண்டு அலை அடிக்கும் கடல்
சூழ்ந்த இவ்வுலகெங்கும் தேடி அலைந்தாலும், ஆசை கொண்ட மானிட
உயிர்க்கு உறுதி நிலையாக வேறொன்று அமைவது உண்டோ?" என்றான்.

     'துவசத்தான்' என்பது இடைக் குறையாகத் 'துசத்தான்' என-நின்றது.