பக்கம் எண் :

முதற் காண்டம்316

"தாயும் நீயே; தந்தையும் நீ; தாவும் நசை நாட்டு இயம் நீயே;
தீயும் நசை தீர் நசை நீயே, செல்வம் நியே, உயிர் இனிதின்
தோயும் அலை நீ ஆகி, உனைத் துறவாது அணுகல் செய்
                                   துறவோ
காயும் வினை என்பார்?" என்றாள் கதிப்பால் காட்டும்
                                   கஞ்சனத்தாள்.

     மோட்ச கதியின் தன்மையை எடுத்துக் காட்டும் கண்ணாடி போன்ற
மரியாள், ஆண்டவனை நோக்கி, "எனக்குத் தாயும் நியே; தந்தையும் நீ;
தாவி எழும் ஆசையை நாட்டத் தக்க குறியிடம் நீயே; எரிக்கும் ஆசையை
யெல்லாம் தீர்த்து வைக்கும் ஆசை நீயே; செல்வமும் நீயே. உயிர்
இன்பமமாக மூழ்கும் கடல் நீயேயாய் இருந்தும், உன்னைத் துறவாமல்
அணுகச் செய்கின்ற துறவையோ சிலர் வாட்டும் செயல் என்பர்?" என்றாள்.

     "பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப், பற்றுக பற்று விடற்கு."
என்ற குறள் (350), 'உனைத் துறவாது அணுகல் செய்துறவு' என்பதன்
விளக்கமாய் அமையும்,
 
                      57
என்றா னவனென் றாளவளென் றின்பக் கடலின் மூழ்கியுளங்
குன்றா வியப்போ டெய்தியவான் கொண்ட தளமும்
                                    பொங்குவப்பிற்
பொன்றா மணமுந் தேன்றிரளும் பொழிபூ மழையைப்
                                    பொழிந்தாசி
யொன்றா யெவரு முரைத்துநிற்ப வுயர்வா வைரொத் திவர்
                                    வாழ்ந்தார்.
 
என்றான் அவன், என்றாள் அவள் என்று, இன்பக் கடலில் மூழ்கி,
                                       உளம்
குன்றா வியப்போடு எய்திய வான் கொண்ட தளமும், பொங்கு
                                       உவப்பின்,
பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ மழையைப் பொழிந்து,
                                       ஆசி
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப, உயர் வானவர் ஒத்து இவர்
                                       வாழ்ந்தார்.