| 'மதி' முதலடியில்
திங்களின் பெயராய் மாதத்தையும், இரண்டாம்
நான்காம் அடிகளில் அறிவையும், மூன்றாம் அடியில் அறிவு காட்டும்
வழியையும் குறித்து நின்றது.
| 75 |
கருவினை
தெளிகினுங் காந்தை கட்புரை
வருவினை யுணர்கிலன் வருத்தும் பாசறைப்
பெருவினை யுரைக்கில னுருகிப் பேருளத்
தருவினை தனித்துணர்ந் தலக்கண் மூழ்கினான். |
| |
கருவினை தெளிகினும்,
காந்தைகண் புரை
வரு வினை உணர்கிலன்; வருத்தும் பாசறைப்
பெரு வினை உரைக்கிலன்; உருகி, பேர் உளத்து,
அரு வினை தனித்து உணர்ந்து, அலக்கண் மூழ்கினான். |
கருப்ப நிகழ்ச்சி
உண்மையேயென்று தெளியப் பெறினும், அவன் தன்
மனைவியிடம் குற்றம் வருவதற்கான செயல் ஒன்றையும் கருத இயலாதவன
ஆயினான்; தன்னை வருத்தும் துன்பமாகிய அந்தப் பெரிய காரியத்தை
அவளுக்கு எடுத்துரைக்கவும் இயலாதவன் ஆயினான்; பெருந்தன்மை
கொண்ட மனத்தோடு அந்த அரிய செயலைத் தனிமையில் எண்ணிப்
பார்த்து, மனம் உருகித் துன்பத்தில் மூழ்கினான்.
'பேர்
உளத்து' - 79ம் பாடல் காண்க.
| 76 |
திருகினா
னொய்யலர் சிதையும் போலுளத்
துருகினான் மெலிந்துயி ரூச லாடநோய்
பருகினான் றுயில்கிலாய்ப் பருகி லாகிவீ
மருகினான் மதுமலர் வயங்கும் வாகையான். |
| |
திருகினால் நொய்
அலர் சிதையும் போல், உளத்து
உருகினான்; மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய்
பருகினான்; துயில் கில் ஆய்ப் பருகு இல் ஆகி, வீ
மருகினான், மதுமலர் வயங்கும் வாகையான் |
தேன் நிறைந்த
மலர்கள் விளங்கும் கொடியைத் தாங்கிய சூசை,
மெல்லிய மலர் திருகினால் சிதைவது போல், தன் உள்ளத்துள் உருகினான்;
உடல் மெலிந்து உயிர் போதலும் வருதலுமாய் ஊசலாட நோய்க்கு
உள்ளானான்; தூங்கவும் இயலாதவனாய் நீர் பருகுதலும் இல்லாதவனாய்ச்
சாதல் நெருங்கினான். |