| |
அலை புறம் கண்ட
நெஞ்சே, அரந்தை உண்டு, உய்யல்
உன்னேல்.
உலை புறம் கண்ட செந் தீ ஒருங்கு மூழ்குதி இன்று" என்ன,
இலை புறம் கண்ட பைம் பூ இருங் கொடி வாட நொந்து,
கலை புறம் கண்ட நூலோன் கலங்கி, உள் உளைந்து
சோர்ந்தான். |
"அலைதலைப்
புறத்தும் தோன்றக் கண்ட என் நெஞ்சே,
துன்பத்தையே உணவாக உண்டு, இன்னமும் உய்ந்து வாழலாமென்று
கருதாதே; அதற்கு மாறாக, இன்றே உலைக்களத்திற் கண்ட செந்நிற
நெருப்பில் ஒருங்கு புகுந்து மூழ்குவாயாக" என்று கூறி,
கலைகளையெல்லாம் கரைகண்ட நூலறிவு படைத்த சூசை கலங்கி,
இலைகளைத் தன்னுடன் கொண்டுள்ள பசுமையும் பெருமையும் வாய்ந்த
பூங்கொடி வாட நொந்து, மனம் வருந்திச் சோர்ந்தான்.
சூசையின்
மெலிவு
-
விளம், - விளம், - மா, கூவிளம்
| 74 |
இருமதி
யெல்லைநா ளின்ன வாறுபோய்ப்
பருமதி மயக்கிய பலவு மோர்ந்துதே
ரொருமதி யுணர்கில னுயிர்ப்பு வீங்கிவீங்
கருமதி மாதவ னரற்றி விம்முவான். |
| |
இரு மதி எல்லை
நாள் இன்ன ஆறு போய்,
பரு மதி மயக்கிய பலவும் ஓர்ந்து, தேர்
ஒரு மதி உணர்கிலன், உயிர்ப்பு வீங்கி, வீங்கு
அரு மதி மா தவன், அரற்றி விம்முவான். |
அரிய அறிவு
பெருகிய பெருந் தவத்தோனாகிய சூசை, இரண்டு மாத
எல்லைக் காலம் இவ்வாறு கடந்துபோக, தன் பெரிய அறிவையும் மயங்கச்
செய்த பல நிலைகளையும் சிந்தித்து, தேர்ந்து கொள்ளத் தக்க ஒரு வழியும்
உணர இயலாதவனாய், பெருமூச்சே மிகுந்து புலம்பி அழுவான். |