| குற்றம் ஏற்படும்
வகையில் இதனைச் செய்தாளென்று முடிவு கட்டினால்,
என்னால் துன்புறுத்தப்பட்ட இப்பூமி என்னை வருத்தி, இன்றே பிளந்து
என்னை முழுமையாக விழுங்கிவிடும்!"
| 72 |
பாருல
களித்துக் காக்கப் பரமனை யுயிர்க்குந் தாயே
பேருல குவப்பக் கன்னி பெயர்கிலள் பெறுவா ளாகி
லீருல கிறைஞ்சு மன்னா ளென்மணத் துணைவி யாமோ
நீருல குறழ்நெஞ் சிற்கிந் நினைவகன் றகன்மி னன்றோ. |
| |
"பார் உலகு அளித்துக்
காக்கப் பரமனை உயிர்க்கும் தாயே,
பேர் உலகு உவப்பக் கன்னி பெயர்கிலள் பெறுவாள் ஆகில்,
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மணத் துணைவி
ஆமோ?
நீர் உலகு உறழ் நெஞ்சிற்கு, இந் நினைவு, அகன்று
அகல்மின், நன்றோ?" |
"இம்மண்ணுலகைப்
பாவத்தினின்று மீட்டுக் காக்க ஆண்டவனை
மகனாகப் பெற்றெடுக்கும் ஒரு தாய், பெரிய வானுலகம் மகிழுமாறு தன்
கன்னிமை நீங்காமல் பெறுவாள் என்பது வேதநூல் உண்மையாயினும்,
மண்ணும் விண்ணுமாகிய இரண்டு உலகங்களும் வணங்கத்தக்க அந்தக்
கன்னித் தாய் என் மணத் துணைவியாய் அமைவாளோ? நீருலகமாகிய
கடல் போல் அலையும் என் நெஞ்சிற்கு இத்தகைய நினைவே தகுமோ?
இதுபோன்ற நினைவுகளே, என்னை விட்டு எட்ட அகன்று போங்கள்!"
கன்னித்
தாய்: 5-வது, திருமணப் படலம், 22-ம் பாடல் அடிக்
குறிப்பு காண்க; இது மரியாளுக்குத் தகுமாயினும், தனது தகுதியின்மை
கருதிய அடக்கத்தால் ஐயம் விலகாமைக்குக் காரணம் கூறியவாறு:
| 73 |
அலைபுறங்
கண்ட நெஞ்சே யரத்தையுண் டுய்ய லுன்னே
லுலைபுறங் கண்ட செந்தீ யொருங்குமூழ் குதியின் றென்ன
விலைபுறங் கண்ட பைம்பூ விருங்கொடி வாட நொந்து
கலைபுறங் கண்ட நூலோன் கலங்கியுள் ளுளைந்து
சோர்ந்தான். |
|