| |
"இருள் அற உணர்வில்
தேர்ந்த இருந் திறத்து அரசர்
கோவே,
தெருள் அற உணர்ந்த ஐயம் செய்த நோய் இனி நீத்து,
உற்ற
மருள் அற உணராய் கொல்லோ? மணம் செயப் பணி
செய்து, அன்றே
அருள் அற வருத்தும் தன்மை அதன் பயன் என
ஓர்ந்தாயோ?" |
"இருளுக்கே இடமில்லாமல்
எல்லாம் உள்ளவாறு உணர்வதில்
தேர்ந்த பெரு வல்லபம் கொண்ட அரசர்க்கரசனாகிய ஆண்டவனே,
தெளிவில்லாமல் நான் உணர்ந்த இந்த ஐயம் விளைவித்த துன்பத்தை
இனிமேல் நீக்கி, நான் கொண்ட மயக்கம் அறுமாறு செய்ய நினையாயோ?
திருமணம் செய்து கொள்ள எனக்குக் கட்டளையிட்டு, கருணை இல்லாமல்
என்னை இவ்வாறு வருத்தும் தன்மையே அதன் பயனென்று அன்றே
கருதினாயோ?"
உணராய்
கொல்லோ -- உணராயோ; 'கொல்' அசைநிலை.
| 71 |
ஆவிநோய்
செய்த விச்சூ லாயவென் வினையன் றேனுந்
தாவிநோய் செய்த வையத் தகுதியா லுணரா நானே
காவிநோய் செய்த கண்ணாள் காசுறச் செய்தா ளென்னி
லோவிநோய் செய்த விப்பா ரொருங்கெனை விழுங்கு மின்றே. |
| |
"ஆவி நோய்
செய்த இச் சூல் ஆய என் வினை அன்றேனும்,
தாவி நோய் செய்த ஐயத் தகுதியால், உணரா நானே,
காவி நோய் செய்த கண்ணாள் காசு உறச் செய்தாள் என்னில்,
ஓவி நோய் செய்த இப் பார், ஒருங்கு எனை விழுங்கும் இன்றே!" |
"என் உயிருக்குத்
துன்பம் தந்த இந்தக் கருப்பம் என்னால் விளைந்த
செயலன்று என்பது தெளிவாய் இருப்பினும், பற்றிப் பிடித்து எனக்குத்
துன்பம் தந்த ஐயமொன்றையே தகுந்த காரணமாகக் கொண்டு, அக்கருப்பம்
பற்றிய உண்மையை உள்ளவாறு உணராத நானே, கருங்குவளை மலரைத்
தன் அழகால் வென்று துன்பம் தந்த கண்ணை உடைய மரியாள் தனக்குக் |