பக்கம் எண் :

முதற் காண்டம்775

     நிறைந்த அரிய தவத்தைக் கொண்ட முதியவனாகிய சீமையோன்
அளவில்லாத ஆசி மொழி கூறவும், பழமையான அரிய வேத குருக்கள்
யாவரும் அன்பினால் எழுச்சி கொண்டு வாழ்த்துக் கூறவும், வானவரும்
புடைசூழ்ந்து வரவும், அரிய பெருமை உடைய சூசையும் மரியாளும்,
அழகிய மொட்டுப் போன்ற குழந்தையை ஏந்திக் கொண்டு,
பொன்மயமான கோவிலைவிட்டுப் போயினர்.

               மக னேர்ந்த படலம் முற்றும்.

          ஆகப் படலம் 12க்குப் பாடல்கள், 1225 903