பக்கம் எண் :

முதற் காண்டம்774

            காணிக்கை தந்து குழந்தையை மீட்டல்
 
                   99
எடுப்பரு மின்ன யாவு மின்பமுந் துயரு மாகக்
கெடுப்பரு மாட்சி பூத்த கேழ் கொடித் துணையுந் தாயுந்
தடுப்பரு மறையின் வாய்மை தவறிலா திருக போதங்
கொடுப்பரு முலகை யாளுங் குழவியை மீட்டிட்டாரே.
 
எடுப்பு அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக,
கெடுப்பு அரும் மாட்சி பூத்த கேழ் கொடித் துணையும் தாயும்
தடுப்பு அரும் மறையின் வாய்மை தவறு இலாது, இரு கபோதம்
கொடுப்ப, அரும் உலகை ஆளும் குழவியை மீட்டிட்டாரே.

     எடுத்துச் சொல்லற்கரிய இவையெல்லாம் இன்பமும் துன்பமும்
கலந்தவிதமாக நடந்து வருகையில், அழிவில்லாத மாட்சி கொண்ட ஒளி
பொருந்திய மலர்க்கொடியை உடைய துணைவனாகிய சூசையும் தாயாகிய
மரியாளும், விலக்க இயலாத வேதத்தில் கூறியுள்ள முறைக்குத் தவறு
நேராத வண்ணம், இரண்டு புறாக்களைக் காணிக்கையாகக் கொடுத்து,
அரிய உலகங்களை யெல்லாம் ஆளும் குழந்தை நாதனை மீட்டுக்
கொண்டனர்.

     கொடுப்ப + அரும் - 'கொடுப்பவரும்' என வர வேண்டியது,
'கொடுப்பரும்' என நின்றது தொகுத்தல் விகாரம்.
 
                    100
மண்டருந் தவத்து மூத்தோன் வரைவில வாசி யோதப்
பண்டரு மறையோர் யாரும் பரிவெழீஇ முகமன் கூற
வண்டரும் புடையிற் சூழ வணிமுகை மகவை யேந்திக்
கொண்டருந் தகவி னோர்பொற் கோயினின் றேகி னாரே.
 
மண்டு அருந் தவத்து மூத்தோன் வரைவு இல ஆசி ஓத,
பண்டு அரு மறையோர் யாரும் பரிவு எழீஇ முகமன் கூற,
அண்டரும் புடையில் சூழ, அணி முகை மகவை ஏந்திக்
கொண்டு, அருந்தகவினோர், பொற் கோயில் நின்று ஏகினாரே.