|
| 25 |
மணிவளர்
முகிற்றண் ணூர்தி வானுடுக் கொடிதண் டிங்க
ளணிவளர் குடைகொண் டெங்கு மருணிழல் மன்னன் போகப்
பணிவளர் நகரு நாடும் பனிப்புறப் பகைத்து வாட்டிப்
பிணிவளர் வினையின் செந்தீப் பிரிவிலா மேய்ந்த தன்றே. |
| |
மணி வளர் முகில்
தண் ஊர்தி, வான் உடுக் கொடி, தண் திங்கள்
அணி வளர் குடை கொண்டு, எங்கும் அருள் நிழல் மன்னன் போக,
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற, பகைத்து வாட்டி,
பிணி வளர் வினையின் செந் தீ, பிரிவு இலா மேய்ந்தது அன்றே. |
நீலமணி
போல் விளங்கும் மேகத்தைக் குளிர்ந்த வாகனமாகவும்,
விண்மீனைக் கொடியாகவும், குளிர்ந்த மதியை அழகு பொருந்திய
குடையாகவும் கொண்டு, எங்கும் அருளாகிய நிழலைத் தரும் அரசனாகிய
ஆண்டவன் நீங்கிப் போகவே, அணிகலன் நிறைந்த யூதேய நாடும்
எருசலேம் நகரமும் நடுங்குமாறு, துன்பம் வளர்வதற்குக் காரணமான தீவினையால் வரும் செந்தீ
பகைத்து வாட்டி, விலகாமல்
மேய்ந்துகொண்டிருந்தது.
இயற்கையின்
இரக்கம்
-
மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.
| 26 |
கண்ண கன்ற
வகழிக லங்கலிற்
றண்ண கன்றத ரங்கந்த ளம்பலே
யெண்ண கன்றகு ணத்திவர் நின்மினென்
றொண்ண கன்றகை நீட்டின தொத்தவே. |
| |
கண் அகன்ற அகழி
கலங்கலின்,
தண் அகன்ற தரங்கம் தளம்பலே,
எண் அகன்ற குணத்து இவர், "நின்மின்!"
என்று,
ஒண் அகன்ற கை நீட்டினது ஒத்தவே. |
இடம்
பரந்த அகழி காற்றில் அசைந்து கலங்குதலால், குளிர்ந்த
அகன்ற அலைகள் கரையில் தளம்பும் தோற்றம், எண்ணுக்கு அடங்காத
குணம் படைத்த இவர்களை, "போகாதே நில்லுங்கள்!" என்று, ஒளி
பொருந்திய நீண்ட கைகளை நீட்டித் தடுப்பதை ஒத்திருந்தது. |