|
"திருத் தகு புயக்
கிரி வளர வீக்குபு செருக் களம் உழக்கு
இவன்,
உலவல் நோக்கிய,
மருத் தகு தடத்து அகில நாட்டினை வயப்பட அளித்தன
அரசன்
ஏற்று, எரி
கருத் தகு முகில் குரல் மெலிய ஆர்த்தன கதத் தொடு
கடுத்தன
களிறு போக்கியும்,
உருத் தகு புயத்து எழ வளையை ஓச்சியும், உருக்கினன்
இரட்டினன்
உருமில் தாக்கியே. |
"அழகு மிக்க
தன் புயங்களாகிய மலைகளை உயரத் தூக்கி
அசைந்துப் போர்க் களத்தைக் கலக்கிய இச் சோசுவன், தன்னை
எதிர்ப்பாரின்றி உலாவிக்கொண்டிருத்தலைக் கண்ட, மணம் மிக்க மலர்த்
தடாகங்களால் அழகு கொண்ட எகில நாட்டை வலிமையோடு காத்த
தாபிரன் என்ற அரசன் எதிர்த்து வந்து, நெருப்பைக் கருவாகக் கொண்ட
மேகத்தின் இடிக்குரலும் மெலியுமாறு முழங்கிய சினத்தோடு விரைந்து
செல்லும் யானைகளை ஏவியும், உருவத்தால் அழகிய தன் புயத்தால்
சக்கராயுதத்தை எடுத்து வீசியும், இடிபோல் தாக்கிச் சினந்து முழங்கினான்.
அரசன் பெயர்
தாபிரன் என்பது உரையிற் கோடலாகப் பழைய
உரையாசிரியர் மூல நூலிலிருந்து கொண்டு கூறியது. (ஜோசுவா 10 : 3).
உருக்கினன் - 'உருத்தனன்' என்ற சொல்லின் மாற்று வடிவம்: 'உரு'
என்ற பகுதி, ஒற்று இரட்டிய குகரச் சாரியை பெற்று, 'உருக்கு' என்பதே
பகுதி போலக் கொண்டு, இறந்தகால வினைமுற்று அமைக்கப்பட்டுள்ளது.
அளித்தன, ஆர்த்தன, கடுத்தன - அளித்த, ஆர்த்த, கடுத்த:
பெயரெச்சங்கள் இடையே 'அன், சாரியை பெற்று நின்றன.
| 74 |
மிகப்படு
பசித்தகு வளையி தாய்ப்பல விதத்துயிர் வெறுத்துன
துயிர
லாற்பசி
தகப்படு சுவைக்கொடு நிறைய வாற்றில தருக்கொடு வரப்பசி
யருளி
நீக்கென
நகப்படு சினத்தொடு கரியி லூக்குபு நகைத்தகு மதிக்கிணை
பருதி
வாய்த்திழை
பகப்படு குறிக்கையி லெழுக தீத்திரள் பயப்படு சமர்க்கள
மிரிய
வோச்சினான். |
|