|
"வேல் அறவும்,
வாள் அறவும், வில் அறவும், வீரர் அறவும், தேர்ச்
சக்கரம் அறவும், தேர் மொட்டு அறவும், தேர் அறவும், யானை அறவும்,
மிக உயர்ந்து துள்ளிய குதிரை அறவும், மேலாக நல்ல அறத்தைக் கொண்ட
சோசுவனின் வில்லினின்று பொழியும் அம்பு மழையோ அறாது:
அறா - 'அறாது'
என்ற சொல் கடைக்குறையாய் நின்றது:
| 72 |
துறுவன வாளிது
மிந்தன யானைகடே
ரிறுவன தாரொடெ ரிந்தன வின்னதெலா
மறுவன காறொடை யங்கையு ரந்தலைக
ளுறுவன யாருமொ ழிந்துந டந்தனனே. |
| |
"துறுவன வாளி
துமிந்தன யானைகள்; தேர்
இறுவன தாரொடு எரிந்தன; இன்னது எலாம்
அறுவன கால் தொடை அம் கை உரம் தலைகள்;
உறுவன, யாரும் ஒழிந்து நடந்தனனே. |
"செறிந்த அம்புகளால்
யானைகள் வெட்டுண்டன; தேர்கள் ஒடிந்து
கொடியோடு எரிந்தன; இது போலவே, கால் தொடை அழகிய கை மார்பு
தலைகள் எல்லாம் அறுந்து விழுவன, எனவே, சோசுவன் தன் மேல்
எதிர்த்து வருவனவும், அவ்வாறு வரும் யாரும், இல்லாது ஒழிந்து போக,
தான் அப்பால் நடந்தான்.
தாபிரன்
அழிவு
கருவிளம், கருவிளம்,
புளிமா, கூவிளம், கருவிளம், கருவிளம், புளிமா,
கூவிளம்.
| 73 |
திருத்தகு
புயக்கிரி வளர வீக்குபு செருக்கள முழக்கிவ னுலவ
னோக்கிய
மருத்தகு தடத்தணி யெகில நாட்டினை வயப்பட வளித்தன
வரச னேற்றெரி
கருத்தகு முகிற்குரல் மெலிய வார்த்தன கதத்தொடு கடுத்தன
களிறு போக்கியு
முருத்தகு புயத்தெழ வளையை யோச்சியு முருக்கின னிரட்டின
னுருமி
றாக்கியே. |
|