|
"பெருமை வாய்ந்த
அச் சோசுவன், இத்தகைய ஒரு நிலை ஏற்பட்ட
தென்று கண்டு, மிகவே நகைத்து, இடி போன்ற வில்லை அவர் மீது குறி
வைத்து வளைக்கவே, நெற்றிச் சிறப்புள்ள யானைகளோடும் பாய்ந்து
செல்லும் குதிரைகளோடும் வெண்ணிற முத்துக்கள் தம்மிடத்து விளங்கித்
தோன்றும் தேர்களும் அழிந்துகெட்டன.
| 70 |
ஓரறு பத்துமி
ரட்டியு மோர்தொடையாற்
சீரறு வேகமொ டம்புகள் சேர்த்திவிடப்
பாரறு வாரியெ னப்படர் சோரிவிழ
வீரறு பேர்பணி மிற்றதொ ரோர்கணையால். |
| |
'ஓர் அறு பத்தும்
இரட்டியும், ஓர் தொடையால்,
சீர் அறு வேகமொடு, அம்புகள் சேர்த்தி விட,
பார் அறு வாரி எனப் படர் சோரி விழ,
ஈர் அறு பேர் பிணம் இற்றது ஒரோர் கணையால். |
"அளவற்ற வேகத்தோடு,
ஒவ்வொரு தொடுப்பில் ஓர் ஆறும் பத்தும்
அதன் இரு மடங்கான இருபதுமாக அம்புகளைச் சேர்த்து அவன் எய்யவே,
நிலத்தை அறுத்துச் செல்லும் வெள்ளம் போல் படரும் உதிரம் சொரிய,
ஒவ்வோர் அம்பினால் பன்னிரண்டு பேர் பிணங்கள் சாய்ந்தன,
'பிணம்' என்பதனைச்
சாதி ஒருமையாகக் கொண்டு, 'இற்றது' என
ஒருமை முடிவு கொடுத்தது வழுவமைதி.
| 71 |
வேலற வாளற
வில்லற வீரரறக்
காலறக் கூம்புக விழ்ந்தற நேமியறத்
தோலற மீமிசை துள்ளிய வாசியற
மேலற மேவினன் யில்லுகு மாரியறா. |
| |
"வேல் அற, வாள்
அற, வில் அற, வீரர் அற,
கால் அற, கூம்பு கவிழ்ந்து அற, நேமி அற,
தோல் அற, மீமிசை துள்ளிய வாசி அற,
மேல் அறம் மேவினன் வில் உகும் மாரி அறா. |
|