|
"குறி தவறாமல்
படும் அம்பே அல்லாமல் படாததென்று ஒன்றும்
இல்லாமையால், சோசுவன் ஏவும் அம்புகள் எதிர்ப்பட்ட யாவற்றையும்
வீழ்த்தவே, அவன் வில்லில் இட்டு வேகமாய்த் தொடுத்த அம்புகள்
மழையாய்ச் சிந்தின; பின் தொகை இல்லாமல் ஏவிய கொல்லும் தன்மை
வாய்ந்த அம்புகளின் வெள்ளம் அனைத்து உயிர்களையும் வாரிக்
கொண்டது.
| 68 |
ஈரிரு தேரின
ரீரறு யானையின
ரோரிரு நூறுகள் மாவுயர் வில்லினர்வந்
தாரிரு பாலின ரார்த்திவ னைத்துதையப்
பாரிரு நாறிசை யன்றுப தைத்தனவே. |
| |
"ஈர் இரு தேரினர்,
ஈர் அறு யானையினர்,
ஈர் இருநூறு உகள் மாஉயர் வில்லினர் வந்து,
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனைத் துதைய,
பார் இரு நால் திசை அன்று பதைத்தனவே. |
"நான்கு தேர்களில்
உள்ளவரும், பன்னிரண்டு யானைகளில்
உள்ளவரும், குதித்துச் செல்லும் நானூறு குதிரைகளில் இருந்த வில்வீரரும்
திரண்டு வந்து, இரு பக்கமும் நிறைந்தவராய் முழங்கி இவனை நெருங்கவே,
உலகத்தின் எட்டுத் திசைகளும் என்ன நேருமோவென்று அன்று பதைத்தன.
'ஆரிரு பாலினர்'
என்பதனை, 'இரு பால் ஆரினர்' எனப் பிரித்துக்
கூட்டுக.
| 69 |
இத்தக வுற்றதெ
னக்கடி நக்கிடிவில்
லத்தக வோனவர் மீதுவ ளைத்தமையான்
மத்தக மாவொடு பாய்பரி மாவொடு வெண்
முத்தக நாறிர தங்கள்மு ரிந்தனவே. |
| |
"இத் தகவு உற்றது
என, கடி நக்கு, இடி வில்.
அத் தகவோன், அவர் மீது வளைத்தமையால்,
மத்தக மாவொடு பாய் பரி மாவொடு வெண்
முத்து அகம் நாறு இரதங்கள் முரிந்தனவே. |
|