பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்28

"உருக்கும் கால் உலகு உயிர் எலாம் கெட
முருக்கும் காலமே முடிந்து போய், அருள்
பருக்கும் காலம் ஆய் புரந்து பாதுகாத்து
இருக்கும் காலம் என்று, இளவல் ஆயினான்.

     "தான் சினந்த காலத்து உலகத்து உயிர்களெல்லாம் கெடுமாறு
கொல்லும் அக்காலம் முடிந்து போய், அருளை மிகுவிக்கும் காலம்
வரவே, அவ்வுயிர்களைப் பேணிப் பாதுகாத்து இருக்கும் காலம்
இதுவென்று, இவ்வாண்டவன் ஒரு சிறுவனாய் வந்துள்ளான்.

     'முருக்கும் காலம்' என்றது, முன் வெள்ளப் பெருக்கால் உயிர்களை
அழித்ததை நினைவிற்கொண்டு கூறியது. இப்படலம் 98-122 காண்க.

               14
மண்ணை வேண்டினும் வகுத்து வாழ்வறா
விண்ணை வேண்டினும் விரும்பி யீகுவான்
கண்ணை வேண்டினு மளிக்குங் காறனை
யெண்ணி வேண்டினு மிகல்செய் வான்கொலோ.
 
"மண்ணை வேண்டினும் வகுத்து, வாழ்வு அறா
விண்ணை வேண்டினும் விரும்பி ஈகுவான்;
கண்ணை வேண்டினும் அளிக்குங் கால், தனை
எண்ணி வேண்டினும், இகல் செய்வான்கொலோ?

     "இவ்வருளின் காலத்து, இவன் அவ்வுயிர்கள் மண்ணரசை
வேண்டினாலும் தந்து, வாழ்வு என்றும் முடியாத விண்ணுலகை
வேண்டினாலும் விருப்பத்தோடு கொடுப்பான்; தன் கண்ணை
வேண்டினாலும் கொடுக்கும் போது, தன்னையே கருதிக் கேட்டாலும்,
கொடுப்பானேயன்றிப் பகை செய்வானோ?

              15
மணியு யிர்க்குநாண் வடிவிற் றோன்றினள்
பிணியு யிர்க்குமா லவாசெய் பீழையாற்
றணியு யிர்க்கெலா முறுதி தந்துதன்
னணியு யிர்க்கிட ராக மாளுவான்.
 
"மணி உயிர்க்கு நாண் வடிவில் தோன்றினன்,
பிணி உயிர்க்கும் மால் அவா செய் பீழையால்
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து, தன்
அணி உயிர்க்கு இடர் மாளுவான்.