"மணி
தான் உயிரோடு இருப்பதுபற்றி நாணும்படி செய்யும் ஒளி
வடிவத்தில் தோன்றிய இம்மகன், பிணியைத் தோற்றுவிக்கும் மயக்கமாகிய
ஆசை வருவிக்கும் துன்பத்தால் தாழ்வடையும் உயிர்களுக்கெல்லாம் உறுதி
தந்து, தன் அழகிய உயிருக்குத் துன்பம் தரும் தன்மையாக இறப்பான்.
16 |
இறந்து
நம்முயி ரிரங்கிக் காக்கவந்
தறந்து தைந்தவ னிறத்தற் கஞ்சலோ
திறந்து தைந்துமுச் செகத்தை யாள்பவன்
மறந்து தைந்தபுன் மதுகைக் கஞ்சவோ. |
|
"இறந்து
நம் உயிர் இரங்கிக் காக்க வந்து,
அறம் துதைந்தவன், இறத்தற்கு அஞ்சவோ?
திறம் துதைந்து முச் செகத்தை ஆள்பவன்,
மறம் துதைந்த புன் மதுகைக்கு அஞ்சவோ? |
"அறத்தில்
தோய்ந்தவனாகிய இவ்வாண்டவன், தான் இறப்பதன்
மூலம் நம் உயிர்களை இரக்கத்தோடு காக்கவென்று இவ்வுலகிற்கு
வந்தபின், இறத்தலுக்கு அஞ்சி இது செய்வானோ? வல்லமை தோய்ந்து
மூவுலகங்களையும் ஆளும் இவன், பாவத்தில் தோய்ந்த எரோதனின்
அற்ப வல்லமைக்கு அஞ்ச வேண்டுமோ?
17 |
நஞ்சி னாலுயி
ரருந்து நாற்படைக்
கஞ்சி லானறி வருள்வல் லாண்மையீ
டெஞ்சி லானென விறைஞ்சிக் கூறினா
ணெஞ்சி னாலமு தார்ந்த நேமியாள். |
|
"நஞ்சினால்
உயிர் அருந்து நாற் படைக்கு
அஞ்சு இலான், அறிவு அருள் வல் ஆண்மை ஈடு
எஞ்சு இலான்" என, இறைஞ்சிக் கூறினாள்,
நெஞ்சினால் அமுது ஆர்ந்த நேமியாள். |
"அறிவிலும்,
அருளிலும், வலிய ஆண்மையிலும், பெருமையிலும்
எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆண்டவன், நஞ்சு போல் உயிரை
உண்ணும் நால்வகைப் படைகளுக்கெல்லாம் அஞ்சுதல் இல்லாதவன்"
என்று, தன் நெஞ்சினால் திருவருள் அமுதத்தை உண்டு நிறைந்த கடல்
போன்ற மரியாள், திரு மகனை வணங்கி, இவ்வாறு முடித்துக் கூறினாள்.
|