பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்30

             18
புடைவ ரும்புகழ் பொலிந்த மிக்கயே
லடைவ ருந்தயை யணிந்த தாடொழு
துடைவ ருங்கருத் துணர்ந்த வாண்மையைத்
தொடைவ ருங்கனி பாவின் சொற்றினான்.
 
புடை வரும் புகழ் பொலிந்த மிக்கயேல்
அடைவு அருந் தயை அணிந்த தாள் தொழுது,
உடைவு அருங் கருத்து உணர்ந்த ஆண்மையை,
தொடை வரும் கனி பாவின் சொற்றினான் :

     பக்கத்தே வந்து கொண்டிருக்கும் புகழாற் பொலிந்த மிக்கயேல்
என்னும் வானவன், அடைவதற்கரிய தயவை அணிந்துள்ள குழந்தை
நாதனின் அடியைத் தொழுது, தன் கருத்தில் உணர்ந்த ஆண்டவனின்
கெடுதற்கரிய ஆண்மைத் திறத்தை, எதுகை மோனை போன்ற
தொடையால் அமையும் கனிந்த பாடலால் சூசைக்குச் சொல்லத்
தொடங்கினான் :

            எசித்தியர் அடைந்த ஒன்பது வாதனைகள்

     -விளம், -மா, தேமா, -விளம், -மா, தேமா

                    19
அஞ்சுவான் கொல்லோ நீதி யணிக்கலத் திலங்கு வீரத்
தெஞ்சுவான் கொல்லோ ஞாலத் தியாவரும் பனிப்ப வாண்மை
விஞ்சுவான் கொல்லோ வென்ன மேவிய வெசித்து நாடர்
துஞ்சுவா னுணர்ந்தார் முன்னாள் சுருதிசேர் கொழுகொம்
                                        பன்னோய்.
 
"அஞ்சுவான் கொல்லோ, நீதி அணிக் கலத்து இலங்கு வீரத்து
எஞ்சுவான் கொல்லோ, ஞாலத்து யாவரும் பனிப்ப ஆண்மை
விஞ்சுவான் கொல்லோ என்ன, மேவிய எசித்து நாடர்
துஞ்சுவான் உணர்ந்தார் முன்நாள், சுருதிசேர் கொழுகொம்ப                                             அன்னோய்!