சித்திரங்கள்
கூடத்துச் சுவர்களில் அமைந்தனவெனக் கொள்க.
மாறிய 'செய்யிய' என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.
- - காய்,
- - காய், - மா, தேமா, - - காய்.
18 |
குடம் புரையிற்
றோன்றுமதி கொழித்த கற்றை தெளித்துமணி
வடம்புரையிற் சித்திரங்கள் வரைந்து தோன்றும் வடிவமதோ
படம்புரையிற் றீட்டியபொற் பாங்கார் நோற்ற பான்மையதோ
சடம்புரையிற் றோன்றியவான் றளமோ தேறல் சால்பரிதே. |
|
குடம் புரையின்
தோன்றும் மதி கொழித்த கற்றை தெளித்து, மணி
வடம் புரையின் சித்திரங்கள் வரைந்து தோன்றும் வடிவம் அதோ?
படம் புரையின் தீட்டிய, பொன் பாங்கார் நோற்ற பான்மை அதோ?
சடம் புரையின் தோன்றிய வான்தளமோ? தேறல் சால்பு அரிதே. |
பொற்குடம் போல்
தோன்றும் திங்கள் வீசிய கதிர்க் கற்றைகளை
வாரித் தெளித்து, மணி வடங்களுக்கு ஒப்பாகச் சித்திரங்கள் வரைந்து
தோன்றும் வடிவம்தான் அதுவோ? தீட்டிய சித்திரத்திற்கு ஒப்பாக, பொன்
போன்ற மனப் பக்குவம் படைத்தோர் தவஞ் செய்திருந்த தன்மைதான்
அதுவோ? உடல் கொண்ட மனிதர்க்கு ஒப்பாக வந்து தோன்றிய வானவர்
படையேதானோ? என்னவென்று தெளிவு கொள்ளுதல் மிக அரிது.
'தீட்டிய
படம் புரையின்' எனச் சொற்களை மாற்றிக் கூட்டுக.
19 |
காவியங்கண்
கிளர்வியப்பா னிமையா நோக்கிக் கனிவோங்கி
யாவியங்கண் ணுண்டெனினு நெடுநாள் மோன ரண்டியதா
லோவியங்கண் மோனமுறீஇ யவைகண் டாரு மோவியமாய்
மேவியங்கண் பிறழாது விளைத்த வின்பால் வியப்பவரே. |
|