அழகு
நிறைந்த அடிகளைப் பணிந்து குழந்தை நாதனை ஏந்தி
எடுக்கவும், நீரில் வளரும் குவளை மலர் தேனைத் துளித்தது போல்,
அவன் சிறப்பு நிறைந்த தன் கண்ணாகிய மலரைத் திறந்து முத்துப் போன்ற
கண்ணீரைச் சொரியவே, துன்பம் பெருகிய மனத்தைக் கொண்ட
அவ்விருவரும், மிதிக்கப்பட்ட தன்மையாய்த் தம் உள்ளத்துள் ஏங்கினர்.
15 |
கதிர்தருங்
காதலன் கன்னித் தாயுரத்
தெதிர்தரும் விழிகலந் தினிதிற் சாய்ந்தனன்
முதிர்தரு மமிர்துக முறுவற் கொட்டலாற்
பொதிர்தரு மின்பமுற் றிருவர் பொங்கினார். |
|
கதிர் தரும்
காதலன் கன்னித் தாய் உரத்து
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன்,
முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால்,
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார். |
ஒளியை வீசும்
மகன் தன் கன்னித் தாயின் மார்பில், எதிர்ப்
படும் இருவர் கண்களும் கலக்குமாறு நோக்கி இனிது சாய்ந்து கொண்டவனாய், முதிர்ந்த
அமிழ்தத்தைப் பொழிந்த தன்மையாய்ப் புன்முறுவல் காட்டவே, அவ்விருவரும் நிறைவு தரும்
இன்பம்
அடைந்து மனம் பூரித்தனர்.
16 |
பொங்கிய
வருத்தியாற் பொலிந்த கன்னியுந்
தங்கிய கொடியொடுட் டளிர்த்த சூசையும்
பங்கய மலரடி பணிந்து பாலனை
யங்கிவ ரகலுதற் காசி கேட்டனர். |
|
பொங்கிய அருத்தியால்
பொலிந்த கன்னியும்,
தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும்,
பங்கய மலர் அடி பணிந்து, பாலனை அங்கு
இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர். |
பொங்கிய
ஆசையோடு பொலிந்த கன்னித் தாயும்,
தன்னிடமுள்ள மலர்க் கொடியோடு உள்ளமும் தழைத்த சூசையும்,
குழந்தை நாதனின் தாமரை மலர் போன்ற அடிகளை வணங்கி,
அங்குப் போவதற்கு இவ்விருவரும் அப்பாலனையே ஆசி கேட்டனர்.
|