இறப்பு
நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களும் ஒரு காலமே
போல முற்றிலும் உணர்ந்து, எக்காலமாயினும் அனைத்திலும் எப்
பொருளாயினும் யாவற்றிலும் உண்மைப் பொருளைத் தெளிவித்து விளங்கும்
முற்றறிவினால் மேம்பட்டவனாகிய குழந்தைநாதன், அன்னக் குஞ்சு
போன்றவனாய், அப்பொழுது உறங்கிக் கொண்டிருந்தான்.
பொருள்
+ யாவினும் - 'பொருளியாவினும்' என, யகரப் புணர்ச்சியில்
இடையே இகரம் பெற்றது.
13 |
கலைமுகந்
தருந்திய புலமைக் காட்சியோ
யலைமுகந் தருந்திய வருளென் றுன்பணி
கொலைமுகந் தருந்துயர் கொண்டுஞ்
செய்வலென்
றுலைமுகந் தருந்தழற் குருகி யேந்தினாள். |
|
"கலை முகந்து
அருந்திய புலமைக் காட்சியோய்,
அலை முகந்து அருந்திய அருள் என்று, உன் பணி,
கொலை முகந்த அருந்துயர் கொண்டும்,
செய்வல்!" என்று,
உலை முகந்த அருந் தழற்கு உருகி, ஏந்தினாள். |
மரியாள்,
உலையினின்று வாரிக் கொண்ட அரிய நெருப்புப் போன்ற
அந்நிலைக்கு மனம் உருகி, "கலைகளையெல்லாம் வாரி உட்கொண்ட
புலமைக்கு ஒப்பான அறிவு கொண்ட ஆண்டவனே, கொலையைத் தழுவ
வேண்டிய அரிய துயரத்தை அடைய நேர்ந்தாலும், அதனை, கடலை வாரி
உண்ட (கடலினும் பெரிதாய) உன் அருளென்று மதித்து, உன்
கட்டளையைச் செய்வேன்!" என்று கூறி, அம்மகனை ஏந்தி எடுத்துக்
கொண்டாள்.
14 |
ஏர்வள ரடிபணிந்
திளவ லேந்தலி
னீர்வளர் குவளைதேன் றுளித்த னேரவன்
சீர்வளர் விழிமலர் சிறந்து முத்துகச் சூர்வளர்
மனத்தவர் துகைத்து ளேங்கினார்.
|
|
ஏர் வளர் அடி
பணிந்து இளவல் ஏந்தலின்,
நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர், அவன்
சீர் வளர் விழி மலர் திறந்து முத்து உக,
சூர் வளர் மனத்து அவர், துகைத்து உள் ஏங்கினார். |
|