என்று கூறினாள்.
இமிழ்த்த மெய்யோடு உயிர் ஆர்வம்
ஒன்றுவான் அழுந்துற நனி தழுவினாள். தழுவி,
நின்று நீவினாள், நெடிய கண் அருவி நீர் ஆட்டிக்
கன்றுவாள்; உளம் கலங்குவாள்; உருகுவாள்; கலுழ்வாள். |
என்று
இவ்வாறெல்லாம் எலிசபெத்தை கூறினாள். தன் மகனின்
இனிய உடலோடு உயிரும் அன்பும் தன்னோடு ஒன்றுமாறு அழுந்தத்
தழுவிக் கொண்டாள். தழுவியவாறே நின்று அவன் தலையைத்
தடவிக்கொடுத்தாள். தனது நெடிய கண்ணின் அருவி நீரால் தன் மகனைக்
குளிப்பாட்டி மனம் புண்படுவாள்; கலங்குவாள்; உருகுவாள்; அழுவாள்.
| 76 |
தீயின்
மூழ்கலர் போனுளம் வாடியும் செந்தீ
வாயின் மூழ்கலர் வருங்கொடி போலுடல் சுருண்டும்
மீயின் மூழ்கின மின்னென வொல்கியுங் குழவி
நோயின் மூழ்கின னுரையெனக் கரைந்தொன்று நுவலான். |
| |
தீயின்
மூழ்கு அலர் போல் உளம் வாடியும், செந்தீ
வாயின் மூழ்கு அலர் வரும் கொடி போல் உடல் சுருண்டும்
மீயின் மூழ்கின மின்னென ஒல்கியும் குழவி
நோயின் மூழ்கினன்; நுரை எனக் கரைந்து ஒன்றும் நுவலான். |
குழந்தையாகிய
கருணையன் அது கண்டு தீயில் மூழ்கிய மலர் போல்
மனம் வாடினான்; செந் நெருப்பில் மூழ்கிய மலர் தோன்றிவரும் பருவத்துக்
கொடிபோல் உடல் சுருண்டான்; மேலே மேகத்திடையே மூழ்கி மறைந்த
மின்னல்போல் தாயோடு ஒடுங்கிக் கொண்டான்; இவ்வாரெல்லாம்
துன்பத்தில் மூழ்கினான். அதனால் நுரைபோலக் கரைந்து, ஒரு வார்த்தையும் சொல்லாது
அமைந்தான்.
எலிசபெத்தை
இறப்பு
-
மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.
| 77 |
நூறு காவத
மேனுகர் சேணுறை
தேறு காவலெ சித்திடைச் சேர்ந்துரா
யூறு காதலு ணர்வினோ டிற்றையா
மாறு மாறில றிந்தனர் மூவரே. |
|