நூறு காவதம் மேல்
நுகர் சேண் உறை
தேறு காவல் எசித்திடைச் சேர்ந்து உராய்,
ஊறு காதல் உணர்வினோடு இற்றை ஆம்
ஆறு மாறு இல் அறிந்தனர் மூவரே. |
திருக்குடும்பத்து
மூவரும் எருசலேமிலிருந்து நூறு காதத்தின்
மேலும் விழுங்கி நின்ற தொலையிலுள்ள தேறிய காவலுள்ள எசித்து
நாட்டை அடைந்து தங்கியிருந்தனர். ஆயினும், ஊறிய அன்பு உணர்வோடு
இவ்விடத்து ஆன தன்மையெல்லாம் மாறுபாடில்லாது அறிந்தனர்.
'ஆமாறு
மாறில் அறிந்தனர்' என்றதனால், அவை ஆயின
பொழுதும், ஆயின அளவும், ஆயின இடமும் மாறாமல், கூட நின்று
கண்டாற்போலக் காட்சியிற் கண்டாரென்பது கருத்து.
| 78 |
கரிந்த
நெஞ்சுக டுத்தக டுந்திறல்
சொரிந்த செம்புன றுன்றிய வாரியிற்
பிரிந்த தன்மை கருணையன் பேருயி
ரரிந்த தில்லையென் றன்பெழக் கண்டனர். |
| |
கரிந்த நெஞ்சு
கடுத்த கடுந் திறல்
சொரிந்த செம்புனல் துன்றிய வாரியில்
பிரிந்த தன்மை, கருணையன் பேருயிர்
அரிந்ததில்லை என்று அன்பு எழக் கண்டனர். |
ஏற்கெனவே
கரிந்த நெஞ்சும் குழந்தைகள் மீது அப்போது கடுப்புங்
கொண்ட கடுந்திறல் வாய்ந்த எரோது மன்னன் வெட்டிச் சிந்திய
குழந்தைகளின் குருதி பெருகியோடிய வெள்ளத்தில் அகப்படாமற் பிரிந்து
நின்ற தன்மையால், கருணையனின் பெருமை வாய்ந்த உயிர்
அரியப்படவில்லை என்பதனை அன்பு பெருகக் கண்டறிந்தனர்.
'கடுந்திறல்'
என்பது, கடுமையான திறலை உடையவன் என
அன்மொழித் தொகையாய் எரோது மன்னனைக் குறித்தது.
| 79 |
கண்ட வேலையிற்
கண்டது வேலையை
யுண்ட பான்மையு வந்துகை யேந்திய
வண்ட நாதனை வாழ்த்தியின் பாழ்ந்தனர்
கொண்ட கோதையும் பூங்கொடி யோனுமே. |
|