கண்ட வேலையில்
கண்டுஅது வேலையை
உண்ட பான்மை உவந்து, கை ஏந்திய
அண்ட நாதனை வாழ்த்தி இன்பு ஆழ்ந்தனர்,
கொண்ட கோதையும் பூங்கொடியோனுமே. |
பூங்கொடியை
ஏந்திய சூசையும் அவன் துணைவியாய்க் கொண்ட
பூமாலை போன்ற மரியாளும் அதனைக் கண்டபோது கற்கண்டு கரைந்து
அமைந்த கடல் நீரை உண்ட தன்மையாய் மகிழ்ந்து, கையில் ஏந்திய வான
நாதனை வாழ்த்தி இன்பத்தில் ஆழ்ந்தனர்.
'கண்டது
வேலை' என்றவிடத்து, 'அது' என்பது பொருளின்றி
நின்றது. கோதை - மாலை, இங்கு மாலை போன்ற பெண்ணுக்கு ஆகுபெயர்.
| 80 |
படலை
யாய்நயம் பீடைப யத்தல்வான்
விடலை நீதியெ னாவிளை யின்பயல்
நடலை யாகநைந் தேலிச பெத்தைதன்
னுடலை நீக்குவ தோர்ந்துளத் தேங்கினார். |
| |
படலையாய் நயம்
பீடை பயத்தல் வான்
விடலை நீதி எனா, விளை இன்பு அயல்
நடலை ஆக, நைந்து ஏலிசபெத்தை தன்
உடலை நீக்குவது ஓர்ந்து உளத்து ஏங்கினார். |
அடுக்காய்
இன்பமும் துன்பமும் தருதல் வானுலக வேந்தனாகிய
கடவுளின் நீதிமுறை என்றபடி, இவ்வாறு விளைந்த இன்பத்திற்கு அயலே
துன்பம் நேருமாறு, எலிசபெத்தை முதுமையால் நைந்து தன் உடலை
நீக்கவிருப்பது உணர்ந்து இவ்விருவரும் மனத்துள் ஏங்கினர்.
விடலை
- ஆண்பாற் சிறப்பு பெயர். இங்கு வேந்தனைக் குறித்தது.
| 81 |
வீயும் வீமலர்
மென்கொடி யுந்தழற்
றோயுந் தன்மைது வண்டுசு ருண்டெனாத்
தாயும் பிள்ளையுந் தாவிடர் நோக்கியுட்
டீயுந் தன்மையி றேம்பியி ரங்கினார். |
|