வீயும் வீ மலர்
மென்கொடியும் தழல்
தோயும் தன்மை துவண்டு சுருண்டெனா,
தாயும் பிள்ளையும் தாவு இடர் நோக்கி,
உள் தீயும் தன்மையில் தேம்பி இரங்கினார்.
|
பூவும்
பூ மலர்ந்துள்ள மெல்லிய கொடியும் தீயுனுள் தோயும் தன்மையாய் துவண்டு சுருண்டதுபோல,
தாய் எலிசபெத்தையையும் பிள்ளை
கருணையனையும் தாக்குகின்ற துன்பத்தை இவ்விருவரும் காட்சியாற் கண்டு,
மனம் தீயும் தன்மையாகத் தேம்பி வருந்தினர்.
| 82 |
வான்வ
ழங்கர சாள்வகுத் தேவலாற்
றேன்வ ழங்கும லர்ச்சினை நீடிய
கான்வ ழங்கினர் கண்ணுளந் தேற்றிட
மீன்வ ழங்குவிண் ணோர்விரைந் தெய்தினார். |
| |
வான் வழங்கு
அரசாள் வகுத்து ஏவலால்,
தேன் வழங்கு மலர்ச்சினை நீடிய
கான் வழங்கினர்கண் உளம் தேற்றிட
மீன் வழங்கு விண்ணோர் விரைந்து எய்தினார். |
வானுலகத்து
அரசியாகிய மரியாள் வகுத்துச் சொல்லி ஏவியதனால்,
தேனைத் தரும் மலர்க் கிளைகள் நீண்டு நிற்கும் காட்டில் வாழ்ந்த
அவ்விருவரிடம் விண்மீன்கள் உலாவும் விண்ணுலகத்தவராகிய வானோர்
மனத்தைத் தேற்றுவதற்கென்று விரைந்து சென்றடைந்தனர்.
| 83 |
கண்க
னிந்துக ளிப்பமெய் காட்டினர்
பண்க னிந்தவி சைகொடு பாடினர்
புண்க னிந்தம ருந்தெனப் பொங்கருள்
விண்க னிந்த வுறுதிவி ளம்பினார். |
| |
கண் கனிந்து
களிப்ப மெய்காட்டினர்;
பண் கனிந்த இசை கொடு பாடினர்;
புண் கனிந்த மருந்து எனப் பொங்கு அருள்
விண் கனிந்த உறுதி விளம்பினார். |
|