காரிய நலத்தவ்
விலக்கண மாறுங்
கடவுள்வா
யுளவெண்பா ரவற்றொன்
றாரிய வனப்பிற் றன்னிடத் தில்லா
னாண்டகை
யவனல னன்றோ. |
|
''சீரிய சவிய
மிக்கன அமான சிறப்பன தூயன யாவும்
நீரிய முறையில் உளன் அவன் தேவன், நீங்கில் ஒன்று அவன் அலன்
ஆகி,
காரிய நலத்து அவ் இலக்கணம் ஆறும் கடவுள்வாய் உள என்பார்.
அவற்று
ஒன்று
ஆரிய வனப்பின் தன்னிடத்து இல்லான் ஆண்டகை அவன் அலன்
அன்றோ.
|
''நன்மையானவையும்
அழகானவையும் மேலானவையும்
அளவற்றவையும் சிறப்புள்ளவையும் தூயவையுமாகிய யாவும் தக்க முறையில்
தன்னிடத்தே கொண்டுள்ள ஒருவனே இறைவன் ஆவான்; அவற்றுள் ஒன்று
நீங்கினும் அவன் கடவுள் அல்லன் ஆவான். ஆகவே, முன் சொன்ன
அவ்விலக்கணம் ஆறும் காரிய நலத்தோடு மெய்க் கடவுளிடம் உள்ளன
என்று அறிவுடையோர் கூறுவர். அவற்றுள் ஒன்றேனும் அதற்குரிய
மேன்மையான அழகோடு தன்னிடத்துக் கொண்டிராத ஒருவன் ஆண்டவன்
அல்லன்.
'காரிய
நலம்' என்றது வெறும் குணப் பேச்சாக இராமல் காரியத்தில்
காணப்பட வேண்டும் என்பது. 'அன்றோ' அசைநிலை.
165 |
சீரெலா மொருவற்
கியல்பென வாகிச்
சேர்த்திய
பலர்ச்கெவ னுண்டா
மூரெலா மொருவ னாளர சாய்மற்
னொருவர்கேட்
டொழுகுத லரசோ
வேரெலா முளபற் றேவர்வே றாக
விவற்குள
தொன்றவற் கிலதாய்
நீரெலா மிலவொவ் வொருவற்கொன் றின்றி
நீர்த்தவோ ரிறையுமி லென்றான். |
|