''சீர் எலாம்
ஒருவற்கு இயல்பு என ஆகி, சேர்த்திய பலர்க்கு எவன்
உண்டு
ஆம்?
ஊர் எலாம் ஒருனை ஆள் அரசு ஆய், மற்று ஒருவர் கேட்டு
ஒழுகுதல்
அரசோ?
ஏர் எலாம் உள பல் தேவர் வேறு ஆக, இவற்கு உளது ஒன்று
அவற்கு
இலதாய்,
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி நீர்த்த ஓர் இறையும்
இல்'' என்றான். |
''நன்மை
எல்லாமே ஒருவனாகிய ஆண்டவனுக்கு இயல்பென்று
முடிந்தபின், அவனோடு சேர்த்து வைத்து எண்ணிய பல தேவர்களுக்கும்
அந்நன்மையெல்லாம் உண்டு என்று எவ்வாறு சொல்லக் கூடும்?
ஊரெல்லாம் ஆளக்கூடிய அரசனாய் ஒருவன் அமைந்திருக்கையில்,
மற்றொருவர் அவன் சொற்கேட்டு நடப்பவராயிருப்பின் அவரையும் அரசன்
என்று சொல்லத் தகுமோ? அழகெல்லாம் ஒருங்கு கொண்ட பல தேவர்கள்
என்னும்போதும், ஒருவருக்கொருவர் வேறு ஆதலுமன்றி, இவனுக்கு உள்ள
ஒன்று அவனுக்கு இல்லையென்று ஆகி, எவனுக்கும் கடவுளுக்கு உரிய
எல்லாத் தன்மையும் இல்லை என்றும், ஒவ்வொருவனுக்கும் ஏதேனும் ஒரு
நன்மை இல்லாமையால், எல்லா நலமும் வாய்ந்த ஒரு தெய்வமாக இவருள்
ஒருவனுமே இல்லையென்றும் ஆகும்'' எனச் சூசை தன் விளக்கத்தை
நிறைவு செய்தான்.
குருட்டாட்டம்
வளர்ந்த வகை
-
மா, கூவிளம், - விளம், - விளம், - மா
166 |
ஒள்கை நீட்டியல்
லொருவிவெஞ் சுடரெழுந் தொளிர
வள்கை நீட்டிய வம்புய மக்கதி ரருந்துங்
கொள்கை நீட்டிய கொழுங்கதி ரோதியைச் செவியே
விள்கை நீட்டினர் வேட்டுளத் தகுந்துபு தெளிந்தார். |
|
ஒள் கை நீட்டி
அல் ஒருவிவெஞ் சுடர் எழுந்து ஒளிர,
அள் கை நீட்டிய அம்புயம் அக்கதிர் அருந்தும்
கொள்கை, நீட்டிய கொழுங் கதிர் ஓதியைச் செவியே
விள் கை நீட்டினர் வேட்டு உளத்து அருந்துபு தெளிந்தார். |
|