வரம்பை யகல்பொற்
பிழைத்தொன்பான்
வாச லிட்டினிதோர்
குரம்பை செய்தான் பெருந்தச்சன்
குறையென் பவருண்டோ. |
| |
"நரம்பை
என்பின் நிரை பின்னி, நல் செம் புனல் தோய்த்து,
பரம்பை
போர்த்து, உள் தசை நிரப்பி, படம் மேல் மயிர்பொலிய
வரம்பை அகல் பொற்பு இழைத்து, ஒன்பான் வாசல் இட்டு இனிது ஓர்
குரம்பை செய்தான் பெருந் தச்சன். குறை என்பவர் உண்டோ? |
"பெரிய
தச்சனாகிய இறைவன் எலும்புகளின் வரிசையை நரம்பு
கொண்டு பின்னி, நல்ல செந்நீராகிய குருதியைத் தோயவிட்டு, உள்ளே
ஊனை நிரப்பி, மேலே தோலால் மூடி, அந்தப் போர்வையின் மேல்
மயிர்கள் பொலிவுடன் விளங்க வரம்பில்லாத அழகு பொருந்தச் செய்து,
ஒன்பது வாயில்களும் இட்டு இனிமையாக ஓர் உடலை அமைத்தான்.
அதற்கு ஒரு குறைபாடு உண்டு என்பவரும் உண்டோ?
ஒன்பான்
வாயில்: கண் இரண்டு, மூக்கு இரண்டு, காது இரண்டு, வாய் ஒன்று, கழிவாய் இரண்டாக ஒன்பது
துவாரங்கள்.
| 21 |
ஆத
லேனு நாறியவெந்
தகிற்பூம்
புகைதவழ்ந்து
காதல் செய்நற் சுதைமூழ்கிக்
கதிர்செய்
மணிக்கலன்பெய்
தூதல் செய்வண் டலஞ்சூடி
யுயிரிற்
பேணினுமூ
னீதல் செய்நா றுடற்குயிரை
யிறுகப்
பிணித்தனனே. |
| |
"ஆதலேனும்,
நாறிய வெந்து அகில் பூம் புகை தவழ்ந்து,
காதல்
செய் நல் சுதை மூழ்கி, கதிர் செய் மணிக்கலன் பெய்து,
ஊதல் செய் வண்டலம் சூடி உயிரின் பேணினும், ஊன்
ஈதல் செய் நாறு உடற்கு உயிரை இறுகப் பிணித்தனனே. |
|