|
"அவ்வாறு
குறையில்லாதது போல் இவ்வுடல் காணப்படினும், வெந்து
மணக்கும் அகிலின் அழகிய புகையைத் தவழ விட்டும், விருப்பத்தைத்
தருகின்ற சந்தனச் சாந்து பூசியும், ஒளி தருகின்ற மாணிக்க அணிகலன்கள்
அணிந்தும், வண்டுகள் ஊதுகின்ற மாலையைச் சூடியும் உயிர்போலப்
பேணினாலும், தன் ஊனினின்று வெளிப்படுகின்ற நாற்றத்தை இயல்பாகக்
கொண்டுள்ள இவ்வுடலுக்கு அத்தெய்வத் தச்சன் ஓர் உயிரை அதனோடு
இறுகப் பிணித்து வைத்துள்ளான்.
| 22 |
மெய்யா லுயிரே
யுணர்வெய்த
மெய்யுந் தானுணராப்
பொய்யா லுயிரே கெடமலிபற்
புரைகண் மூழ்கியுடல்
மொய்யா லுயிர்கொல் பகையல்லான்
முனைந்தோர் வேண்டுவதோ
வய்யா வுயிருய் வகையரிதுள்
ளடுமிப் பகைவினையால். |
| |
"மெய்யால்
உயிரே உணர்வு எய்த, மெய்யும் தான் உணராப்
பொய்யால்
உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி, உடல்
மொய்யால் உயிர் கொல் பகை அல்லால்,. முனைந்தோர் வேண்டுவதோ?
அய்யா, உயிர் உய் வகை அரிது உள் அடும் இப்பகை வினையால்! |
"அவ்வாறு
பிணிக்கப்பட்ட உயிர் அவ்வுடலோடு கூடி நின்று உணர்வு
பெற வேண்டியிருக்க, அவ்வுடலும் தானே உணராத பொய்யில் அகப்பட்டு
அவ்வுயிரும் கெடுமாறு பல பாவங்களில் மூழ்குவதனால், அவ்வுடலே
போரால் அவ்வுயிரைக் கொல்லும் பகையாக அமைவதல்லாமல், வேறு
பகைவரும் வேண்டுமோ? ஐயா! உள்ளிருந்தே தாக்கும் இப்பகைச் செயலால்
உயிர் உய்யும் வகையோ அரிதாகும்.
| 23 |
உள்ளே வைகு
மிப்பகையோ
டுடன்பட் டெப்புறமு
மெள்ளே வைகும் பெரும்பகைசூழ்ந்
திகல்செய் முறையரிதே |
|