தெள்ளே
வைகுங் கவின்காட்டித்
தீம்பாற்
கலந்தவிடம்
வள்ளே வைகு முயிர்க்கூட்டி
வதைசெய் பகையதுவே. |
| |
|
"உள்ளே
வைகும் இப் பகையோடு உடன்பட்டு, எப் புறமும்
எள்ளே
வைகும் பெரும் பகை சூழ்ந்து இகல் செய்முறை அரிதே,
தெள்ளே வைகும் கவின் காட்டி, தீம் பால் கலந்த விடம்
வள்ளே வைகும் உயிர்க்கு ஊட்டி வதை செய் பகை அதுவே.
|
"உள்ளே
பொருந்தியிருக்கும் இந்தப் பகையோடு ஒன்றுபட்டு,
எப்பக்கமும் இகழத் தக்கவிதமாய்த் தங்கியிருக்கும் பெரிய பகை ஒன்று
சூழ்ந்து நின்று போர் நடத்தும் முறையோ மேலும் வெல்வதற்கு அரிதாம்.
அது தெளிவோடு பொருந்திய அழகு நலத்தை வெளியே காட்டி,
வலிமையோடு தங்கியிருக்கும் உயிர்க்கு இனிய பாலோடு கலந்த நஞ்சை
உள்ளே ஊட்டி வதை செய்யும் பகையாகும்.
| 24 |
சொன்ன
பகையு மியாதென்னற்
சூட்சி
நலமிக்கோ
னின்ன வுடம்பின் றுணையாக
வெழிற்பூங்
கொடிச்சாயன்
மின்ன வெழுதிச் சுரிகுழலார்
மிளிர்ந்த
வினஞ்செய்தா
னன்ன வினந்தா னுயிரறநூ
லனைத்துங்
கொல்பகையே. |
| |
"சொன்ன
பகையும் யாது என்னின், சூட்சி நலம் மிக்கோன்
இன்ன
உடம்பின் துணையாக எழில் பூங்கொடிச் சாயல்
மின்ன எழுதிச் சுரி குழலார் மிளிர்ந்த இனம் செய்தான்.
அன்ன இனம் தான் உயிர் அறநூல் அறநூல் அனைத்தும்
கொல் பகையே, |
"சொன்ன
பகை யாது என்றால், ஆய்வு நலம் மிக்கவனாகிய
ஆண்டவன் இந்த ஆண் உடம்பின் துணையாக அழகிய பூங்கொடியின்
சாயல் மின்னும்படியாக வரைந்து மிளிர்ந்த சுருண்ட கூந்தலையுடைய மாதர்
இனத்தைப் படைத்தான். அந்தப் பென்ணினமே உயிரையும் அறநூல்
அனைத்தையும் கொல்லும் பகையாகும்.
|