பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 303

     பகையும் + யாது - 'பகையுமியாது' என மகரத்தின் முன் யகரம்
இகரம் பெற்றுப் புணர்ந்தது.

 
                    25
மின்னார் வேலூ னுமிழ்ந்தொழுகும்
     வேழ மருப்புமெதிர்த்
தொன்னார் வெம்போர் கடந்துருமொத்
     துள்ளத் தஞ்சாநான்
பொன்னார் மணிப்பூ ணணிச்சாயற்
     பூங்கொம் பனையார்போர்
முன்னார் நிற்பா ரென்றெண்ணி
     முரிந்துட் குழைகிற்பேன்.
 
"மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து,
ஒன்னார் வெம் போர் கடந்து, உரும் ஒத்து உள்ளத்து அஞ்சா நான்,
'பொன் ஆர் மணிப் பூண் அணிச் சாயல் பூங்கொம்பு
அனையார் போர் முன் ஆர் நிற்பார்!' என்று எண்ணி முரிந்து உள்
                                   குழை கிற்பேன்.

     "மின்னல் ஒளி நிறைந்த வேலால் தாக்குண்டு தன் ஊனினின்று
உதிரம் உமிழ்ந்து ஒழுகும் யானையின் கொம்பின் முன்னும் எதிர்த்து நின்று,
பகைவரது கொடிய போரையும் வென்று, இடியைப் போன்று உள்ளத்தில்
எதற்கும் அஞ்சாத நானும், 'பொன்னில் நிறையப் பதித்த மாணிக்கத்தாலான
அணிகலன் உடைய அழகிய தோற்றமுள்ள பூங்கொம்பு போன்ற மகளிரோடு
நேரும் காமப் போரின் முன் யார் விழாது நிற்பார்! என்று எண்ணி உள்ளம்
முறிந்து குழைந்து சோர்வேன்.

     வேலால் தாக்குண்ட யானை மிகுந்த சீற்றத்தோடு பாய்ந்து
வருமென்பது குறிப்பு.

 
                 26
முதிர்செய் யுணர்வுற் றறம்வெஃகி
     முயனல் வினையுணர்கா
லெதிர்செய் மதிவெண் முகங்கண்டா
     லெரிபூண் டூங்கிமின்னக்