பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 304

கதிர்செய் குழைவில் வீசவிரு
     கண்செந் தீப்பொழியப்
பொதிர்செய் யெரிமுன் மெழுகெனவுட்
     புலனைந் துருகுமன்றோ.
 
"முதிர் செய் உணர்வு உற்று அறம் வெஃகி முயல் நல்வினை
                                        உணர்கால்,
எதிர்செய் மதி வெண் முகம் கண்டால், எரி பூண் தூங்கி மின்ன,
கதிர் செய் குழை வில் வீச, இரு கண் செந் தீப் பொழிய,
பொதிர்செய் எரி முன் மெழுகு என உட்புலன் நைந்து உருகும்
                                        அன்றோ?

     "முதிர்ந்த நல்லுணர்வு அடைந்து அறத்தை விரும்பி முயன்று
நல்வினை செய்ய நினையும் பொழுது, எதிர்ப்படுகின்ற பெண்ணின் மதி
போன்ற வெண் முகத்தைக் காண நேர்ந்தால், அவள் அணிந்துள்ள
மாணிக்க வடம் கழுத்தில் தொங்கி மின்னவும். கதிர் பரப்புகின்ற குண்டலம்
காதுகளில் ஒளி வீசவும். இரு கண்களும் காமப் பார்வையால் நெருப்பைப்
பொழியவும், எனது உட்புலனாகிய மனம் மிகுந்த நெருப்பின் முன் மெழுகு
போல நைந்து உருகும் அன்றோ?

     எரி பூண் - நெருப்பைப் போல் செந்நிறம் பரப்பும் மாணிக்கத்தால்
செய்த அணிகலன்.

 
               27
இருமஞ் சன்ன விருண்டொளிறு
     மியல்புற் றவிர்கூந்தல்
மருவிஞ் சகிற்பூந் தவிசிருளே
     வகைதுஞ் சிடமென்பார்
செருவிஞ் சொன்னார் கரந்துயிரைச்
     செருக்குங் காடதுவே
கருநஞ் சதுவே யுயிருண்ணுங்
     கருங்கூற் றதுதானே.
 
"இரு மஞ்சு அன்ன இருண்டு ஒளிறும் இயல்பு உற்று அவிர் கூந்தல்,
மரு விஞ்சு அகில் பூந் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார்.
செரு விஞ்சு ஒன்னார் கரந்து உயிரைச் செருக்கும் காடு அதுவே;
கரு நஞ்சு அதுவே; உயிர் உண்ணும் கடுங் கூற்று அதுதான்!