என்ன வஞ்சனைகள்
பலவும் கூறி, "ஈர்த்து அற, நான்
அன்ன நவமறைக்குக் கேடு இன்று உய்ப்பேன் அரிது" என்று
சொன்ன தன்மைத்தே, வெகுளி விம்மும் துகள் பொங்கி,
முன்னம் மெலிந்து அலைந்த பின்னர்ப் பள்ளி முயங்கு கின்றாள். |
என்று
இவ்வாறு பல வஞ்சக மொழிகளும் கூறி, "வேரோடு
அழியுமாறு அரிந்து அந்தப் புதிய வேதத்திற்கு நான் இன்றே அரிய
முறையில் கேடு விளைவிப்பேன்" என்று சொல்லியவாறு, சினத்தினால்
பரவும் குற்றங்களால் பொங்கி, முன்னர் கவலையோடு மெலிந்து சிறிது
அலைந்தபின் படுக்கையில் கிடந்து துயில் கொள்கின்றாள் சுரமி.
முன்
'என்பாள்' என எதிர்காலத்தும் இங்கு 'முயங்குகின்றாள்' என
நிகழ்காலத்தும் நின்றவற்றைத் தெளிவுபற்றி இறந்த காலம் கருதியனவாகக் கொள்க.
| 23 |
முன்னா ளுற்றவா
சிழந்த பேயம் முனிதன்மேற்
பன்னா ளுற்றபகை
செலுத்துந் தன்மை பழிப்பின்றி
யின்னா ளுற்றபகை
யாகு மென்னக் கனவிற்றா
னன்னா ளுற்றசினந்
தூண்ட வங்கண் டோன்றிற்றே. |
| |
முன் நாள் உற்ற
அரசு இழந்த பேய், அம் முனிதன்மேல்
பல் நாள் உற்ற பகை செலுத்தும் தன்மை, பழிப்பு இன்றி
இன்னாள் உற்ற பகை ஆகும் என்ன, கனவில் தான்
அன்னாள் உற்ற சினம் தூண்ட அங்கண் தோன்றிற்றே. |
முன்நாட்களில்
எசித்து நாட்டில் தான் பெற்றிருந்த அரசாட்சியை
இழந்த பேய், அம் முனிவன் மேல் பல நாட்களாகக் கொண்டிருந்த
பகையைக் காட்டும் முறை, இவள் கொண்ட பகையால் பழிப்பிற்கு
இடமின்றிக் கைகூடும் என்று கருதி, அவள் கொண்ட சினம் தூண்ட, தானே
கனவில் அங்கு வந்து தோன்றிற்று.
|