பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 398

             21
எந்நா டெக்குலமெம்
     முறையென் றறியா திரந்தொருவன்
சொன்னா டினனஃதே
     சுருதி யாகத் தொடர்ந்தெண்ணி
முன்னா டுணையில்லா
     வாமன் றானு முயங்குகின்ற
பின்னா டொடராரார்
     பொறுக்குந் தன்மை பிழையென்பாள்.
 
"எந் நாடு, எக் குலம், எம் முறை என்று அறியாது, இரந்து ஒருவன்
சொல் நாடினன். அஃதே சுருதியாகத் தொடர்ந்து எண்ணி,
முன் நாள் துணை இல்லா வாமன் தானும் முயங்குகின்ற,
பின் நாள் தொடரார் ஆர்? பொறுக்கும் தன்மை பிழை" என்பாள

     "தனக்கு எந்த நாடு என்ன குலம், என்ன முறை என்றெல்லாம் அறிய
இயலாது, பிச்சையெடுத்து உணணும் ஒருவன் வேதம் சொல்ல விரும்பினான்.
அதனையே வேதமாகத் தொடர்ந்து எண்ணி முன் நாளில் தனக்கு ஒப்பு
எவரும் இல்லாத வாமனுமே தழுவிக் கொள்கின்றானென்றால், பின் நாளில்
யார்தாம் அவ் வேதத்தைத் தொடராதிருப்பர்? இதைப் பார்த்துப் பொறுத்துக்
கொண்டிருப்பது பாவம்" என்பாள்.

 
             22
என்ன வஞ்சனைகள்
     பலவுங் கூறி யீர்த்தறநா
னன்ன நவமறைக்குக்
     கேடின்றுய்ப் பே னரிதென்று
சொன்ன தன்மைத்தே
     வெகுளி விம்முந் துகள்பொங்கி
முன்ன மெலிந் தலைந்த
     பின்னர்ப் பள்ளி முயங்குகின்றாள்.