"உள்ளம் காய்ந்து
உளையப் பசும் பொற் கோயில் ஒருங்கு, அந்தோ!
பள்ளம் காண் அடியே வீழக் கண்டேன்; பழிப்பு உய்க்கும்
கள்ளம் காட்டிய ஓர் மறையும் யாரும் கனிந்து உள்ளி,
வெள்ளம் காட்டு அழிவும் இனிக் காண்பேனோ மெலிந்து?" என்பாள். |
"ஐயோ!
என் உள்ளம் வெம்பி வருந்துமாறு என் தேவர்களுக்குரிய
பசும் பொன்னாலான கோவில்களெல்லாம், இருந்த இடம் பள்ளம்
தோன்றுமாறு ஒருங்கே அடியோடு விழுந்து அழியவும் கண்டேன்; இனி,
பழிப்பில் கொண்டு செலுத்தும் கள்ளத்தைக் காட்டி நின்ற ஒரு வேதத்தை
யாவரும் கனிவோடு கருதுவதனால், அந்த வெள்ளம் ஒத்த வேதம்
உண்டாக்கும் அழிவையும் சோர்ந்து நின்று காண்பேனோ?" என்பாள்.
| 20 |
பொன்னா
ருலகொப்பப்
பசும்பொன் னிஞ்சிப் புகைதவழ
மின்னார் மணந்தேக்கித்
தொழுத தேவர் வெறுத்தந்தோ
கொன்னார் முனிவேடத்
தொருவன் மாயைக் கொடுஞ்சொல்லா
லொன்னார் கண்டுவப்ப
வொழிந்த திந்நா டொருங்கென்பாள். |
| |
"பொன் ஆர்
உலகு ஒப்பப் பசும் பொன் இஞ்சிப் புகை தவழ
மின் ஆர் மணம் தேக்கித் தொழுத தேவர் வெறுத்து, அந்தோ!
கொன் ஆர் முனி வேடத்து ஒருவன் மாயைக் கொடுஞ் சொல்லால்
ஒன்னார் கண்டு உவப்ப ஒழிந்தது இந் நாடு ஒருங்கு" என்பாள். |
"ஐயோ!
பொன்னுலகம் போலப் பசும் பொன்னால் செய்த மதில் மீது
புகை தவழுமாறு மின்னல் போன்ற நெருப்பினிடையே சாம்பிராணி மணத்தைத் தேங்கவிட்டுத்
தொழுத தேவர்களெல்லாம் வெறுத்து விலகிப்
போக, வீணான முனிவன் வேடத்தோடு ஒருவன் வந்து சொல்லிய மாயக்
கொடுஞ் சொல்லின் விளைவாகப் பகைவர் கண்டு மகிழுமாறு இந்நாடு
ஒருங்கே ஒழிந்தது" என்பாள்.
|