சுரமி
நினைவும் கனவும்
-
மா, - - காய், - மா, - மா, - - காய்
18 |
விரைவாய்ப்
பூந்தாழை
முகைகள்
விண்ட வெறிவிம்முங்
கரைவாய்ச் சங்கங்கள்
கதிர்முத்
தீன்ற கடல்சூழுந்
தரைவாய்ப் பூணொக்க
வெசித்து
நாட்டிற் றகவுய்க்கு
முரைவாய்க் கதிர்வெள்ள
மொளிப்பச்
சுரமி யுணர்ந்தாளே. |
|
விரை வாய்ப்
பூந் தாழை முகைகள் விண்ட வெறி விம்மும்
கரை வாய்ச் சங்கங்கள் கதிர் முத்து ஈன்ற கடல் சூழும்
தரைவாய்ப் பூண் ஒக்க, எசித்து நாட்டில் தகவு உய்க்கும்
உரை வாய்க் கதிர் வெள்ளம் ஒளிப்பச் சுரமி உணர்ந்தாளே: |
மணத்தைத்
தம்முட் கொண்ட அழகிய தாழை மொட்டுகள் விரிந்த
மணம் பரவும் கடற்கரையில் சங்குகள் ஒளி பொருந்திய முத்துக்களை ஈன்று
வைத்த கடல் சூழும் உலகத்தில் ஓர் அளிகலன்போல் விளங்கும்படி,
மேன்மைக்குச் செலுத்தும் சூசையின் உபதேச மொழியின் வழியாகப் பரவும்
மெஞ்ஞானக் கதிர் வெள்ளத்தை எசித்து நாட்டில் பரவாமல் மறைக்கச் சுரமி
கருதினாள்:
19 |
உள்ளங் காய்ந்துளையப்
பசும் பொற் கோயி லொருங்கந்தோ
பள்ளங் காணடியே
வீழக் கண்டேன் பழிப்புய்க்குங்
கள்ளங் காட்டியவோர்
மறையும் யாருங் கனிந்துள்ளி
வெள்ளங் காட்டழிவு
மினிக்காண் பேனோ மெலிந்தென்பாள். |
|