| 39 |
வேய்நிறக்
கரும்பு நக்கும்
விரிதலைக்
கதலி யூழ்த்துத்
தூய்நிறத் தேறல் பாய்ந்து
துணர்வயல்
விளையிந் நாடே
தீய்நிறக் கரிந்து வாடத்
தேவரை
யொருங்கு நீக்கி
நோய்நிறக் கருத்தில் யாரு
நூதன
மணுகி னாரே. |
| |
"வேய் நிறக்
கரும்பு நக்கும் விரி தலைக் கதலி ஊழ்த்து,
தூய் நிறத் தேறல் பாய்ந்து, துணர் வயல் விளை இந் நாடே
தீய் நிறக் கரிந்து வாட, தேவரை ஒருங்கு நீக்கி,
நோய் நிறக் கருத்தில் யாரும் நூதனம் அணுகினாரே! |
"மூங்கில்
போல் வளர்ந்த கரும்பு தடவுவதனால் இலை விரிந்த
தலையை உடைய வாழையின் பழங்கள் பதமழிந்து, தூய நிறமுள்ள
மதுவாகப் பாய்ந்து, அதனால் பூங்கொத்துக்களை உடைய வயல் விளையும்
இந்த நாடு தீப்பட்டது போல் கரிந்து வாடுமாறு, நம் தேவர்களையெல்லாம்
ஒருங்கே நீக்கிவிட்டு, பித்த நோய் கொண்ட கருத்தோடு யாவரும் புதிய
வேதத்தைத் தழுவிக் கொண்டனரே! இனி என் செய்வோம்?
| 40 |
முனியுருக்
காட்டி யாரோ
முறைகுல
மொன்று மில்லான்
பனியுருக் காட்டித் தண்ணம்
பயத்தவன்
பெழுவக் கூறுங்
கனியுருக் காட்டித் தீஞ்சொற்
கண்ணியா
லுளத்தை வீக்கி
நனியுருக் காட்டி வாய்ந்த
நான்மறை
யொழியச் செய்தான். |
| |
"முனி உருக் காட்டி,
யாரோ முறை குலம் ஒன்றும் இல்லான்,
பனி உருக் காட்டி, தண்ணம் பயத்த அன்பு எழுவக் கூறும்
கனி உருக் காட்டி, தீம் சொல் கண்ணியால் உளத்தை வீக்கி,
நனி உருக் காட்டி, வாய்ந்த நால் மறை ஒழியச் செய்தான்! |
|