|
"வானுலகமே
தொழத் தக்க குணங் கொண்டவனே, தாயாகிய
மரியாளோடு திருமகன் இயேசுவும் இருபக்கமும் அமர்ந்து தாங்கி,
தகுந்தவாறு துயரத்தை ஆற்றக் கூடிய அருளைப் பொழிந்து நிற்க,
தீயினால் வாடிய தளிர் போன்ற உடலை, நீக்கிவிட்டு, பாதலம் சென்று
தூது உரைத்தாய் என்பதனால், நோயால் மெலிந்த தம் உடலினின்று
உயிர் நீங்கும் வேளை, நொந்தவர்க்கு நீ வந்து உதவுவதன்
அடையாளமாக, ஏழாவதாக, ஒளியின் முகத்தோடு மலர்ந்த இந்த இறுதி
மணி வரம் வழங்கியதாகும்.
| 40 |
தேன்பயில்
மதுரத் தினிதினீ வளர்த்த
திருமக
னளித்தமன் னுயிர்கட்
கூன்பயி லுடலா லுறுங்கச டகற்றி
யுரியநல்
லறநெறி நிறுத்தி
மீன்பயில் வான்வீட் டவ்வுயிர் சேர்த்தி
விழைந்தர
சாளவின் றுனக்கே
நான்பயில் வரங்கள் வகுத்தியென் றாசி
நல்கினான்
பொதுவற முதலோன். |
| |
|
"தேன் பயில்
மதுரத்து இனிதின் நீ வளர்த்த திரு மகன் அளித்த
மன்
உயிர்கட்கு
ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி, உரிய நல் அற நெறி
நிறுத்தி,
மீன் பயில் வான் வீட்டு அவ் உயிர் சேர்த்தி, விழைந்து அரசு
ஆள,
இன்று உனக்கே
நான் பயில் வரங்கள் வகுத்தி" என்று, ஆசி நல்கினான், பொது
அற
முதலோன்.
|
"தேனிற்
பொருந்திய இனிமையினும் இனிதாக நீ வளர்த்த திருமகன்
மீட்டுக் காத்த மனித உயிர்களுக்கு, ஊனால் அமைந்த உடலால் நேரும்
பாவ மாசுகளை அகற்றி, அவர்களை உரிய நல்லற நெறியில் நிறுத்தி,
விண்மீன்கள் உள்ள வானினும் உயர்ந்த வீட்டில் அவ்வுயிர்களைக்
கொண்டு வந்து சேர்த்து, விருப்பத்தோடு அவர்களையும் நீ அரசாளும்
பொருட்டு, இன்று நான் உனக்கு வழங்கிய வரங்களை நீ
பகிர்ந்தளிப்பாய் என்று, பொது என்பது இல்லாமல் யாவருக்கும்
முதலோனாகிய தந்தையாங் கடவுள் ஆசி வழங்கினான்.
|