பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 807

"விருந்தினைக் கண்டார் முகத்து, அளவு இன்றி வினை செய மிடைந்த
                                        நோய் அருந்தி,
திருந்தினை பொறையின் நுண்முறை எல்லாம், திரு மணிக் குன்று
                                        ஒத்தாய் என்னா
மருந்தினைப் போன்று வருந்தினார் வருத்தம் அறுத்து, உளம் குளிர்ப்ப
                                        நல் வரமே
அருந்தினை என, ஆறாம் மணி அளித்தேன், அரும் பொறை அருள்
                                        அரசு உடையோய்!


     "அரிய பொறுமையால் அருள் கூட்டும் அரசுக்கு உடையவனே,
விருந்தினரை எதிரே கண்டவர் முகம் போல, அளவின்றித் தொழில்
செய்தமையால், செறிந்த நோய்களை அனுபவித்து, பொறுமையின் நுண்ணிய
முறைகளிலெல்லாம் திருந்த நின்று, அழகிய வைர மணிக் குன்று போன்று
விளங்கினாய் என்பதனால், வருந்தியவர் வருத்தத்தை மருந்து போன்று
நீக்கி, அவர்கள் உள்ளத்தைக் குளிர்விக்க நல்ல வரமே கொண்டுள்ளாய்
என்பதற்கு அடையாளமாக, இவ் வாறாவது மணியை அளித்தேன்.

 
                    39
தாயொடு புதல்வ னிருபுடைத் தாங்கித்
     தகுந்துய ராற்றரு ளியக்கத்
தீயொடு தீந்த தளிருட னீக்கிச்
     சென்றதூ துரைத்தனை யென்னா
நோயொடு மெலிந்த வுடல்கெடு மெல்வை
     நொந்தவர்க் குதவநீ யொளியின்
வாயொடு மலர்ந்த கடைமணி வரமே
     வகுத்ததாம் வான்றொழு மரபோய்.
 

"தாயொடு புதல்வன் இரு புடைத் தாங்கி, தகும் துயர் ஆற்று
                                   அருள் இயக்கத்
தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கி, சென்று தூது உரைத்தனை
                                   என்னா,
நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை, நொந்தவர்க்கு
                                   உதவ நீ, ஒளியின்
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே வகுத்தது ஆம், வான்
                                   தொழு மரபோய்.