பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 806

               37
தேவருள் திளைத்த நிரப்பினாற் கன்னி
     சினையையுற் றீனினு மீன்ற
மேவருள் மகவை மகனென வினிதாய்
     விருப்பொடு வளர்த்தனை யென்னா
நோவருள் புதல்வ ரிலாக்குறை தீர்த்து
     நுண்டகைச் சந்ததி யளிப்பக் காவருள்
கமழ்பூங் கொடிநலோ யைந்தாங்
     கடியொளி மணிவரந் தந்தேன்.
 
"தே இருள் திளைத்த நிரப்பினால், கன்னி சினையை உற்று ஈனினும்,
                                       ஈன்ற
மேவு அருள் மகவை மகன் என இனிதாய் விருப்பொடு
                                            வளர்த்தனை என்னா,
நோவு அருள் புதல்வர் இலாக் குறை தீர்த்து, நுண் தகைச் சந்ததி
                                          அளிப்ப.
கா அருள் கமழ் பூங் கொடி நலோய், ஐந்தாம் கடி ஒளி மணி வரம்
                                         தந்தேன்.

     "பூஞ்சோலை போல் அருள் மணம் கமழும் மலர்க்கொடி தாங்கிய
நல்லவனே, தெய்வ அருளில் மூழ்கித் திளைத்த நிறைவினால், கன்னி உன்
துணையின்றிக் கருவுற்றுப் பெற்றிருப்பினும், பெற்ற திருவருள் மகனை
உன் மகன் போலவே மதித்து இனிதாய் விருப்போடு வளர்த்தாய்
என்பதனால், நோவைத் தரும் மக்கள் இல்லாக் குறையைத் தீர்த்து,
நுண்ணிய தகுதி வாய்ந்த சந்ததி கொடுக்க, மிக்க ஒளியுள்ள இவ்வைந்தாம்
மணியால் வரம் தந்தேன்.

 
                         38
விருந்தினைக் கண்டார் முகத்தள வின்றி
     வினைசெய மிடைந்தநோ யருந்தித்
திருந்தினை பொறையின் னுண்முறை யெல்லாந்
     திருமணிக் குன்றொத்தா யென்னா
மருந்தினைப் போன்று வருந்தினார் வருத்த
     மறுத்துளங் குளிர்ப்பநல் வரமே
யருந்தினை யெனவா றாமணி யளித்தே
     னரும்பொறை யருளர சுடையோய்.