|
"இரக்கம்
என்னும் கடலின் அளவை விஞ்சிய அருளைக்
கொண்டவனே, கதிரவனை ஆடையாக உடுத்து, குளிர்த்த ஒளியைப் பரப்பி,
ஆண்டவனைப் பெற்றெடுத்த தாயைக் கருதி, கருத்தையும் கடந்த
அன்போடு கூடிய அருளால் காத்து, அரிய முறையிலே பேணினாய்
என்பதனால், வேதமே வடிவாகத் தோன்றிய அத்தாயின் தொடர்பும்
அருளும் உதவியும் சார்பும் மக்கள் அடையத் தருவாய் என்பதற்கு
அடையாளமாக, இம் மூன்றாம் மணியைத் தந்தேன்.
| 36 |
கனம்பழுத்
திரிந்த வுருமென விண்ணிற்
கடிந்தபேய்
கொண்ட தொற்பகையான்
மனம்பழுத் தியற்றும் வஞ்சனை நாண
வழுலிலா
வென்றனை யென்னாச்
சினம்பழுத் தெதிர்த்த குணுக்கின மோடிச்
செல்வரின்
னாமவேற் கஞ்சத்
தனம்பழுத் தெரிநா லாமணி வரமே
தந்ததாம்
வெற்றியங் கொடியோய். |
| |
"கனம் பழுத்து
இரிந்த உரும் என விண்ணின் கடிந்த பேய்,
கொண்ட
தொல் பகையால்
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண, வழு இலா
வென்றனை
என்னா,
சினம் பழுத்து எதிர்த்த குணுங்கு இனம் ஓடி, செல்வ நின் நாம
வேற்கு
அஞ்ச
தனம் பழுத்து எரி நாலாம் மணி, வரமே தந்தது ஆம், வெற்றி
அம்
கொடியோய்! |
"வெற்றி
பொருந்திய அழகிய மலர்க் கொடியை உடையவனே,
மேகத்தினின்று முதிர்ந்து விழுந்த இடி போல வானுலகினின்று தள்ளப்பட்ட
பேய்கள், தாம் கொண்ட பழைய பகையால் மனம் முதிர்ந்து செய்யும்
வஞ்சனை யெல்லாம் நாணும்படி, தவறாமல் அவற்றை நீ வென்றாய்
என்பதனால், பொன்னிடையே பதியநின்று ஒளிரும் இந் நாலாம் மணி, சினம்
முதிர்ந்து எதிர்த்த பேய்க் கூட்டம் ஓடி, உனது செல்வப் பெயராகிய
வேலுக்கு அஞ்சுமாறு வரம் தந்ததற்கு அடையாளமாம்.
|