"போய், வினை
கொணரும் பொறிகள் ஐந்து அடக்கி, பொலம் தவ
வேலியைக் கோலி,
தூய்வினை உளத்தில் துகள் புகா காத்து, சுடர் விளக்கு ஆயினாய்
என்னா.
தீய் வினை வரு முன் காக்கவும், வந்த தீது நேர்ந்து ஒழிக்கவும்
உணர்த்தி,
காய் வினை விலக்கும் வரத்தை இவ் இரண்டாங் கதிர் மணி
காட்டும்,
மாதவனே! |
"பெருந் தவத்தோனே, நினைவின் வழியே
போய், தீய செயல்களைக்
கொணரும் ஐம்பொறிகளையும் அடக்கி, அழகிய தவம் என்னும் வேலியைச்
சுற்றிலும் வளைத்து, தூய வினைக்கே உரிய உள்ளத்தில் பாவம் புகாமல்
காத்து, சுடர் விளக்காய் விளங்கினாய் என்பதனால், தீ வினை வருமுன்னே
வராது காக்கவும், வந்த தீதை ஏற்றுக்கொண்டு ஒழிக்கவும் உணர்த்தி,
அவ்வாறு சுடும் தன்மையுள்ள பாவ வினையை விலக்கும் வரத்தை இந்தக்
கதிரொளி கொண்ட இரண்டாம் மணி காட்டும்.
| 35 |
பருதியே யுடுத்திப்
பனிச்சுட ரியக்கிப்
பரமனைப்
பயந்ததாய் தன்னைக்
கருதியே கருத்துக் கடந்தவன் பருளாற்
காத்தரி
தோம்பினா யென்னாச்
சுருதியே வடிவாய்த் தோன்றிய தாயின்
றொடர்பரு
ளுதவிசார் பெய்தத்
தருதியே யெனமூன் றாமணி தத்தேன்
றயைக்கடற்
கடந்தருண் மிக்கோய். |
| |
|
"பருதியே உடுத்து,
பனிச் சுடர் இயக்கி, பரமனைப் பயந்த தாய் தன்னைக்
கருதியே கருத்துக் கடந்த அன்பு அருளால் காத்து அரிது ஓம்பினாய்
என்னா,
சுருதியே வடிவாய்த் தோன்றிய தாயின் தொடர்பு அருள் உதவி சார்பு எய்தத்
தருதியே என மூன்றாம் மணி தந்தேன், தயைக் கடல் கடந்து அருள்
மிக்கோய்!
|
|