பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 803

               33
களங்கமுற் றதுகண் டிந்துதேய்த் தொளிறுங்
     கழலினாட் கன்னிமை காத்துத்
துளங்கமுற் றியசெஞ் சுடரினுன் கற்புந்
     துகளறக் கர்த்தனை யென்னா
வுளங்கணுற் றழற்றும் விரகநோ யறக்கற்
     புரிநலந் தரவரந் தந்தே
விளங்கமுற் பதித்த முதன்மணி தந்தேன்
     வெண் கொடி யொத்துளத் தூயோய்.
 
"களங்கம் உற்றது கண்டு இந்து தேய்த்து ஒளிறும் கழலினாள்
                              கன்னிமை காத்து,
துளங்கம் முற்றிய செஞ்சுடரின், உன் கற்பும், துகள் அறக்
                              காத்தனை என்னா,
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற, கற்பு உரி
                              நலம் தர வரம் தந்தே,
விளங்க முன் பதித்த முதல் மணி தந்தேன், வெண் கொடி
                              ஒத்து உளத் தூயோய்!

     "உன் வெண் மலர்க் கொடியை ஒத்து மனத் தூய்மை உடையவனே,
திங்கள் களங்கமுடைய தென்று கண்டு, அதனை மிதித்து ஒளியுடன்
விளங்கும் கால்களை உடைய மரியாளின் கன்னிமையையும் காத்து, உனது
கற்பையும் ஒளி முதிர்ந்த பகலவனைப் போல் குற்றமறக் காத்தாய்
என்பதனால். மனத்தில் சேர்ந்து வெதுப்பும் காம நோய் மக்களுக்கு,
முழுதும் கெட, கற்பைக் காப்பதற்கு உரிய நலத்தை அவர்களுக்கு வழங்க
உனக்கு வரம் தந்து, விளக்கமுற முன்னே பதித்துள்ள முதல் மணியை
அதற்கு அடையாளமாகத் தந்தேன்.

     'கழல்' வீரர் காலணியாய், அதனை அணிந்துள்ள கால்களுக்கு
ஆகுபெயராய் அமையும். இங்கு, அக்காலணியும் தொடர்பும் கருதாமல்,
வெறுமனே 'கால்' என்னும் பொருள் சுட்டி நின்றது.

 
                 34
போய்வினை கொணரும் பொறிகளைந் தடக்கிப்
     பொலந்தவ வேலியைக் கோலித்
தூய்வினை யுளத்திற் றுகள்புகா காத்துச்
     சுடர்விளக் காயினா யென்னாத்
தீய்வினை வருமுன் காக்கவும் வந்த தீதுநேர்ந்
     தொழிக்கவு முணர்த்திக்
காய்வினை விலக்கும் வரத்தையில் விரண்டாங்
     கதிர்மணி காட்டுமா தவனே.