|
துன்பங்களை நினைந்து
வருந்திய சிறந்த திருமகனின் அரியணை
அருகே, விளங்கும் விண் மீன்களை மணிகளோடு வரிசையாகப் பதித்து
அமைத்த இருக்கையில் பொலிவோடு அமருமாறு சூசையை இருத்தி,
பின்வருமாறு சொல்லலானான் :
சூசை
பெற்ற ஏழுவரங்கள்
| 32 |
தாவிதென்
பவற்கே சாற்றிய வண்ணந்
தவிர்கிலா
தரசுனக் களித்தேன்
றூவிமின் பிலிற்றுஞ் சுடிகைசூழ் பயிற்றித்
துளங்குமேழ்
மணிகளோ வுன்னை
மேவிநின் றவர்க்கு வேண்டுவ வெறுப்ப
விரும்பிநீ
யளிக்குமேழ் வரங்க
ளேவியின் றுனக்குத் தந்தது காட்ட
வினியிவற்
றுரிமைகே ளென்றான். |
| |
|
"தாவிது என்பவற்கே
சாற்றிய வண்ணம், தவிர்கு இலாது அரசு
உனக்கு
அளித்தேன்.
தூவி மின் பிலிற்றும் சுடிகை சூழ் பயிற்றித் துளங்கும் ஏழ்
மணிகளோ,
உன்னை
மேவி நின்றவர்க்கு வேண்டுவ வெறுப்ப விரும்பி நீ அளிக்கும் ஏழ்
வரங்கள்
ஏவி இன்று உனக்குத் தந்தது காட்ட. இனி இவற்று உரிமை
கேள்"
என்றான்:
|
"தாவீது
என்பவனுக்குச் சொல்லியபடியே, தவறாமல் நான் உனக்கு
அரசு தந்துள்ளேன். மின்னொளியைத் தூவிச் சொரியும் இம்முடியில் சூழப்
பதித்து விளங்கும் ஏழு மணிகள், உன்னை நாடி வந்தவர்க்கு வேண்டிய
வரங்களை வெறுக்கும் அளவிற்கு மிகுதியாக விரும்பி நீ அளிக்கும் ஏழு
வரங்களை இன்று நான் உனக்கு ஏவித் தந்துள்ளதைக் காட்டுவதற்காம்.
இனி. அவற்றின் உரிய தன்மையை நான் கூறக் கேள்" என்று, தொடர்ந்து
சொல்லலானான் :
'வெறுப்ப'
என்பது, 'வெறுக்கும் அளவிற்கு' என்று அமைந்து, மிகுதிப்
பொருள் தந்தது. 'விறப்பும் உறப்பும் வெறுப்புச் செறிவே,
(தொல், சொல் 347)
|