"மீன் நிலம்
முடியாள் திருமண நாளில், வினை அறு நேயமாம் நானே,
தேன் நிலம் துணர் கொய் இக் கொடி தந்தேன்; சேர்ந்து உனை
அண்டின
யாரும்,
கான் நிலம் கொடியின் நீழலில் உய்யக் கருணை செய்வேன்" என, தேவ
வான் நிலம் காதல் ஆம் பிரான், ஆசி வகுத்து, அருள் பொழிந்தான்.
|
வானுலகில்
தெய்வீக அன்பு எனப்படும் பரிசுத்த ஆவியாம்
ஆண்டவன், "விண்மீன்கள் இடங்கொண்ட முடியை அணிந்த மரியாளின்
திருமண நாளில், பாவ வினையை அறுக்கும் தெய்வீக அன்பாகிய நானே,
தேன் இடங் கொண்ட மலர்க் கொத்துக்களைக் கொய்யும் அளவிற்
கொண்ட இக்கொடியை உனக்குத் தந்தேன்; அதனால், உன்னை
அடைக்கலமாக அண்டிச் சேர்ந்த யாவரும், மணம் இடங்கொண்ட
அக்கொடியின் நிழலில் உய்வு பெறுமாறு கருணை செய்வேன்" என்று கூறி,
ஆசி வழங்கி, அருள் வெள்ளமும் பொழிந்தான்.
"நிழல்
என்பது 'நீழல்' என நீட்டல் விகாரம் கொண்டது.
| 43 |
நல்கிய வாசி
நயத்துயர் சூசை
நறுமையிற்
பிரிவிலா தொன்றாய்
மல்கிய செல்வத் துரியவோர் கடவுள்
வழங்குமாள்
மூன்றையும் வணங்கிப்
பில்கிய நயனி லும்வயங் காட்டப்
பிழைத்தவித்தவித்
தொழும்பனை நோக்கி
யல்கிய புன்மை வளம்படச் செய்ய
வருச்சனை
யுமக்கெனப் பணிந்தான். |
| |
நல்கிய ஆசி
நயத்து உயர் சூசை, நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய்,
மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள் வழங்கும் ஆள் மூன்றையும்
வணங்கி,
"பில்கிய நயனில் உம் வயம் காட்ட, பிழைத்த இத் தொழும்பனை
நோக்கி,
அல்கிய புன்மை வளம் படச் செய்ய, அருச்சனை உமக்கு!" எனப்
பணிந்தான். |
|